நாடு தழுவிய ரீதியில் 48மணிநேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்தவகையில் நேற்று இரவு தொடக்கம் அமுலாகும் வகையில் பணி பகிஷ்கரிப்பு இடம்பெற்று வருகின்றது. வவுனியா மத்திய தபாலகத்திலும் ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பலர் தபாலகத்திற்குச் சென்று திருப்பிச் செல்வதைக்காணக்கூடியதாக உள்ளது.

ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நான்கு கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்றுவருவதாக ஒன்றியத்தின் இணைப்பாளர் கே. என். சிந்தக பண்டார  தெரிவித்துள்ளார்.