தமிழ் மக்களின் குரலுக்கு செவிசாய்க்காது இலங்கை தமிழரசுக் கட்சி ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்துள்ளது - வினோநோகராதலிங்கம் எம்.பி குற்றச்சாட்டு

Published By: Digital Desk 3

11 Jan, 2023 | 11:39 AM
image

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கருத்துகள் தெரிவித்து வரும் இந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சி வெளியேறி சென்றுள்ளது. இதன் மூலம்  தமிழ் மக்களின் கருத்துகளை தமிழரசுக் கட்சியினர் மதிக்கவில்லை என வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் விநோநோகராதலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் விநோநோகராதலிங்கம் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுடைய கடந்த கால போராட்டம், இழப்புக்கள் மற்றும் தியாகங்கள் அனைத்தையும் தமிழரசுக் கட்சி செய்த இந்த செயல் மூலமாக கொச்சைப் படுத்தியுள்ளார்கள்.

தமிழரசுக் கட்சியினர் உண்மையான அக்கறையோடு தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருந்திருக்கவில்லை என்பதை அவர்களுடைய இந்த முடிவு உணர்த்துகிறது.

தற்போது அது தேர்தலாக இருந்தாலும் சரி பேச்சுவார்த்தை மற்றும் ஜனாதிபதி சந்திப்புகளாக இருந்தாலும் சரி அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் ஆர்வத்துடன் கருத்துகள் தெரிவித்து வரும் இந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழரசு கட்சி வெளியேறி சென்றுள்ளது. இதன்மூலம் தமிழ் மக்களின் கருத்துகளை தமிழரசுக் கட்சியினர் மதிக்கவில்லை என்பது வெளிச்சமாகியுள்ளது.

அதாவது இவர்கள் பிரிந்து சென்று தேர்தலில் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளனர். இது தமிழ் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அத்துடன் இவர்களின் நடவடிக்கை அற்ப தேர்தல் கதிரைகளுக்காக தமிழர்களுக்கு துரோகம் விளைவிக்கும் செயற்பாடாகும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் விநோநோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கற்பிட்டி விமானப்படை முகாமில் வெடிப்பு :...

2023-09-26 21:06:57
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் ராஜபக்ஷ்வினருக்கும் எந்த...

2023-09-26 19:50:49
news-image

அலி சப்ரி - ஜெய்சங்கர் சந்திப்பு...

2023-09-26 17:04:48
news-image

நாட்டில் நடமாடும் கொள்ளைக் கும்பல் :...

2023-09-26 17:25:05
news-image

இரட்டைக் குழந்தைகள் உயிரிழப்பு : விசாரணைகளை...

2023-09-26 19:41:18
news-image

கருத்துச்சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் வலியுறுத்தியது பிரித்தானியா

2023-09-26 19:01:03
news-image

இலங்கையில் சினோபெக் நிறுவனத்தின் விநியோக செயற்பாடுகளை...

2023-09-26 20:04:20
news-image

முல்லைத்தீவில் புலிகளின் ஆயுதங்கள், தங்கம் தேடிய...

2023-09-26 19:00:05
news-image

போரில் உயிரிழந்தவர்களுக்கான பொது நினைவுச்சின்னம் :...

2023-09-26 17:10:33
news-image

பிரான்ஸ் தூதுவர் யாழ். பல்கலைக்கழகத்துக்கு விஜயம்

2023-09-26 20:01:05
news-image

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரின் திடீர்...

2023-09-26 20:00:41
news-image

தளபாட விற்பனை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து...

2023-09-26 17:04:11