தனியார் துறை மற்றும் அரச தரப்பினர் ஆகிய இரு தரப்பினருக்குமான புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவிக்கின்றது.

இதற்காக பல்வேறு தரப்பினருடன் கருத்துக்களை பெற்று வருவதாக அமைச்சின் செயலாளர் ஜினசரி தடல்லகே கூறினார்.