(இராஜதுரை ஹஷான்)
எம்.வி.எக்பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்கு சர்வதேச சட்டத்தின் பிரகாரம் நட்டஈடு பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன்,அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க துறைசார் குழுவின் அறிக்கையை சட்டமாதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம்.வி – எக்ஸ்பிரஸ் பேர்ல் சரக்கு கப்பலினால் சகல வழிமுறைகளிலும் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் கடல் வளங்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் ஆராய்வதற்கு நீதியமைச்சினால் துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் நியமிக்கப்பட்ட குழுவினர் தமது ஆய்வு அறிக்கையை நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷவிடம் நேற்று கையளித்தனர்.
தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் 40 துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் நியமிக்கப்பட்ட இந்த குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு தமது இறுதி அறிக்கையை நீதியமைச்சரிடம் கையளித்துள்ளனர்.
பேராசிரியர் அஜித் த சில்வா மற்றும் பேராசிரியர் பிரசாந்தி குணவர்தன ஆகியோர் இந்த துறைசார் குழுவின் இணை தலைவர்களாக செயற்பட்டனர்.
தீ விபத்துக்கு உள்ளாகி கடலில் முழுமையாக மூழ்கிய இந்த கப்பலை அந்த இடத்தில் (கடலில்)இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்தால் கப்பலில் உள்ள கழிவு திரவங்கள் கடல் நீரில் முழுமையாக சேரும் அபாயம் காணப்படுகிறது.
அதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்கு நட்டஈட்டை பெற்றுக்கொள்ள சர்வதேச சட்டத்தின் பிரகாரம் செயற்படவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு துறைசார் குழுவின் அறிக்கையை சட்டமாதிபர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நீதியமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM