5 தமிழ்க் கட்சிகளின் பங்கேற்பில் புதிய கூட்டணி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமையை கோரவும் முஸ்தீபு

10 Jan, 2023 | 09:13 PM
image

(ஆர்.ராம்)

தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஐந்து கட்சிகள் கூட்டிணைவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக அக்கட்சிகளின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஷ் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஆகியனவே இவ்வாறு ஒன்றிணைந்து புதிய கூட்டணியை அமைக்கவுள்ளன.

அத்துடன், இத்தரப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற உரிமையை தம்வசம் கோருவதற்கும் முயற்சிகளை எடுக்கவுள்ளதாகவும் நம்பகரமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த விடயம் சம்பந்தமாக, கொழும்பில் உள்ள ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரத்தின் இல்லத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பொன்று இன்று நண்பகலில் நடைபெற்றிருந்தது.

இந்தச் சந்திப்பில், செல்வம் அடைக்கலநாதன், ஆர்.ராகவன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், கோவிந்தன் கருணாகரம் எம்.பி. ரெலோ பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன், ஹென்றி மகேந்திரன், விந்தன் கனகரட்னம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றிருந்த சந்திப்பு மற்றும் தமிழரசுக்கட்சியின் வெளிப்பாடுகள் தொடர்பில் முதலில் கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன.

அதனைத்தொடர்ந்துரூபவ் ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஒன்றிணைந்து பணியாற்றிய தரப்புக்களாக காணப்படுகின்ற நிலையில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலினையும் ஒன்றிணைந்து முகங்கொடுப்பது பற்றி ஆராயப்பட்டது. அதற்கு அமைவாக பங்கேற்ற தலைவர்கள் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அதற்கமைவாக, அடுத்துவரும் நாட்களில் ஐந்து கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்கும் முக்கிய கூட்டமொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. 

இதன்போது, உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை முகங்கொடுப்பது, தொகுதிப்பகிர்வு, சின்னம், கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று சென்னையில் இருந்து திரும்பிய சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ரெலோ ஊடகப்பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மக்கள் அரசாங்கத்துக்கு சிறந்த...

2025-02-14 16:51:12
news-image

பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவு வேலைத்திட்டங்களை...

2025-02-14 16:57:03
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய மாவட்டத்...

2025-02-14 16:58:28
news-image

நானுஓயாவில் வீடொன்றில் தாழிறங்கிய நிலம்! -...

2025-02-14 16:49:29
news-image

இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக வேந்தராக கல்லேல்லே...

2025-02-14 16:55:18
news-image

வடக்குக்கான இரவு தபால் ரயில் சேவை...

2025-02-14 16:53:18
news-image

தையிட்டி விவகாரம் : மீண்டும் இனவாதம்...

2025-02-14 16:58:29
news-image

காற்றாலை மின் திட்டம் - அடுத்த...

2025-02-14 16:08:19
news-image

பக்கமுன பகுதியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட...

2025-02-14 16:31:01
news-image

ரின் மீன் இறக்குமதியை தடை செய்வதாக...

2025-02-14 15:53:02
news-image

நாமல் ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்

2025-02-14 15:33:58
news-image

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை

2025-02-14 15:11:39