சவூதியில் மெஸி, ரொனால்டோ மோதும் கால்பந்தாட்டப் போட்டி

Published By: Sethu

10 Jan, 2023 | 05:21 PM
image

கால்பந்தாட்ட ஜாம்பவான்களான லயனல் மெஸியும், கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அடுத்தவாரம் கால்பந்தாட்டப் போட்டியொன்றில் மோதவுள்ளனர். 

கிறிஸ்டியானோ ரொனால்டோ அங்கம் வகிக்கும் சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகம், அல் நாசரின் பிரதான சவூதி போட்டியாளரான அல் ஹிலால் கழகமும் கூட்டாக இணைந்து  லயனல் மெஸி அங்கம் வகிக்கும் பிரெஞ்சு கழகமான பாரிஸ் செயின்ற் ஜேர்மைன் (பிஎஸ்ஜி) கழகத்துடன் சினேகபூர்வ போட்டியொன்றில் மோதவுள்ளது.

சவூதி அரேபியவின் தலைநகர் றியாத்தில்  எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி இப்போட்டி நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ணத்தை வென்ற ஆர்ஜென்டீன அணித்தலைவர் லயனல் மெஸி, பாரிஸ் செயின்ற் ஜேர்மைன் கழகத்தில் விளையாடுகிறார். 

கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவூதி அரேபியாவின் அல் நாசர் கழகத்தில் அண்மையில் இணைந்தார். அவருக்கு வருடாந்தம் 200 மில்லியன் யூரோ ஊதியம் வழங்கப்படும் என நம்பப்படுகிறது.

அல் நாசர் கழகத்தின் சார்பில் ரொனால்டோ இன்னும் விளையாடவில்லை.

இந்நிலையில், சவூதி அரேபியாவின் முன்னிலைக் கழகங்களான அல் நாசர் மற்றும் அல் ஹிலால் கழக வீரர்கள் ஒன்றிணைந்து பாரிஸ் செயின்ற் ஜேர்மைன் கழகத்துடன் சிநேகபூர்வ போட்டியில் மோதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆசிய விளையாட்டு விழா 50 மீ....

2023-09-29 13:38:37
news-image

54ஆவது வருடாந்த செய்ன்ட்ஸ் குவாட்ரங்யூலர் விளையாட்டுப்...

2023-09-29 10:26:40
news-image

தனுஷ்க மீதான கிரிக்கெட் தடையை நீக்குவது...

2023-09-28 20:30:51
news-image

நீதிமன்ற தீர்ப்பு அனைத்தையும் தெரிவித்துவிட்டது -...

2023-09-28 16:19:57
news-image

தனுஸ்க குறித்தநீதிமன்ற தீர்ப்பு - தசுன்...

2023-09-28 14:27:10
news-image

FFSL தேர்தலில் தக்ஷித்த தரப்பினர் வெற்றிபெறுவது...

2023-09-28 13:38:45
news-image

தனுஸ்க பாலியல் உறவின் போது ஆணுறையை...

2023-09-28 11:43:12
news-image

கடைசிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி; தொடர்...

2023-09-28 12:09:25
news-image

தனுஷ்க குணதிலக பாலியல் குற்றச்சாட்டில் குற்றமற்றவர்-...

2023-09-28 08:05:35
news-image

இருபதுக்கு - 20 இல் நேபாளம்...

2023-09-27 15:10:16
news-image

இளைஞர் விளையாட்டு விழா கடற்கரை கரப்பந்தாட்டடம்...

2023-09-27 10:24:38
news-image

லீக் பிரதிநிதிகள் கால்பந்தாட்ட மறுமலர்ச்சிக்காக மனச்சாட்சிக்கு...

2023-09-27 10:31:59