வெங்காயத்தாளின் மருத்துவ குணங்கள்! 

Published By: Devika

10 Jan, 2023 | 02:52 PM
image

வெங்காயத்தாள் கீரை வகையை சார்ந்தது. வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள், செப்பு, பொஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மங்கனீஸ், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன.

வெங்காயத்தில்  இருப்பது போலவே வெங்காயத்தாளிலும் கந்தகச்சத்து அதிகளவில் உள்ளது. வெங்காயத்தாளில் உள்ள பக்டீரிய எதிர்ப்பு பண்புகள், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் வழங்கும். உடலிலுள்ள கொழுப்புகளை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. இரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

வெங்காயப் பூ மற்றும் வெங்காய சாறு பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்களையும் குணமாக்கும். வெங்காயப் பூ பசியை தூண்டும். வெங்காயத்தாளில் குறைந்த கலோரிகளே இருக்கின்றன. மேலும்  வெங்காயத்தாளில் விட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல விட்டமின் சத்துக்களும் நிறைந்துள்ளன.

 வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் இதிலுள்ள அலிசின் என்னும் வேதிப்பொருளானது புற்றுநோயினை தடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது. வெங்காயத்தாள் கண்நோய் மற்றும் கண் பிரச்சினைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

வெங்காயத்தாள் இரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. உடலின் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது. மேலும் வெங்காயத்தாள் கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. வெங்காயத் தாளில் உள்ள விட்டமின் கே இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29