சந்தேகத்தில் தான் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம் - விமல் வீரவன்ச

Published By: Digital Desk 3

10 Jan, 2023 | 08:52 PM
image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவரும் எதிர்பாராத வகையில் அமோக வெற்றி பெறுவோம். தேர்தல் இடம்பெறுமா என்ற சந்தேகத்தில் தான் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம்.

வேட்பு மனுத்தாக்களின் பின்னர் தேர்தலை பிற்போட அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொள்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, மேலவை இலங்கை கூட்டணி ஆகிய அரசியல் தரப்பினர்களுக்கு இடையில் திங்கட்கிழமை இரவு  இலங்கை கம்யூனிசக் கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட அரசியல் கூட்டணி அமைக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய கூட்டணி அமைப்பதற்கு விரிவான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்னும் ஓரிரு நாட்களுக்குள்  உமது புதிய கூட்டணி உத்தியோகபூர்வமாக  அறிவிக்கப்படும். கூட்டணியில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தொடர்ந்து கூட்டணியாக செயல்பட தீர்மானித்துள்ளோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் உரிய தினத்தில் நடத்தப்படுமா என்ற சந்தேகத்தில் தான் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். எவ்வழிகளிலாவது தேர்தலை பிற்போட அரசாங்கம் பல சூழ்ச்சிகளை முன்னெடுக்கிறது. அரசாங்கத்தில் முறையற்ற செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

தமது செயற்பாடுகளை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என குறிப்பிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறுக்கு வழியில் தேர்தலை பிற்போட முயற்சிக்காமல் தேர்தலை முறையாக நடத்த பொறுப்புடன் செயற்பட வேண்டும். தமக்கான அரசியல் நிர்வாகத்தை தெரிவு செய்துக் கொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரணிலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது...

2025-03-19 16:04:51
news-image

பட்டலந்தவில் சித்திரவதை புரிந்தவர்களுடன் அரசாங்கத்துக்கு ‘டீல்’...

2025-03-19 17:21:51
news-image

சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காத உணவகத்திற்கு எதிராக...

2025-03-19 22:52:48
news-image

8 இலட்சத்து 33 ஆயிரம் பேருக்கு...

2025-03-19 21:51:24
news-image

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஜோசப் ஸ்டாலின்...

2025-03-19 17:16:13
news-image

இளைஞர்களுக்கு சந்தர்ப்பமளிக்கவே இம்தியாஸ் பதவி விலகினார்...

2025-03-19 21:49:54
news-image

அத்தியாவசியப்பொருட்களின் விலைகளை குறைத்து நிவாரணம் வழங்குங்கள்...

2025-03-19 17:09:52
news-image

இவர் ஒரு குற்றவாளி – ஆனால்...

2025-03-19 22:05:38
news-image

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக...

2025-03-19 21:45:57
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சி இன்று...

2025-03-19 21:39:13
news-image

அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளைப்பீடத்தின் கட்டளைத்தளபதி அட்மிரல்...

2025-03-19 21:41:38
news-image

அரசாங்கம் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை பெற...

2025-03-19 17:19:08