சமந்தாவின் 'சாகுந்தலம்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 5

10 Jan, 2023 | 12:55 PM
image

நடிகை சமந்தா கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சாகுந்தலம்' எனும் காவிய காதல் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

தெலுங்கின் முன்னணி இயக்குநரான குணசேகர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சாகுந்தலம்'. இதில் நடிகை சமந்தா கதையின் நாயகியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் மோகன் பாபு, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நஹல்லா, பிரகாஷ்ராஜ், மதுபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

முக்கிய வேடத்தில் நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா நடித்திருக்கிறார். சேகர் வி ஜோசப் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மணி ஷர்மா இசை அமைத்திருக்கிறார்.

காளிதாசர் எழுதிய புராண இதிகாச கதையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை குணா டீம் ஒர்க்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நீலிமா குணா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தில் சமந்தாவின் தோற்றம், காட்சி அமைப்பு, கிறாபிக்ஸ் காட்சிகள் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இந்தத் திரைப்படம் அடுத்த மாதம் 17ஆம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பங்கு பற்றி நடிகை சமந்தா பேசுகையில், '' எமக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் சினிமா மீதான காதலை இழக்கவில்லை.'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37