(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் போது பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 21 குண்டுகளை தயாரித்தமை, சதி செய்தமை தொடர்பில் 6 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், குறித்த வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று (9) குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, இவ்வாறு அவ்வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மொஹம்மட் சிபான் சத்தார், செய்யத் அபூ மொஹம்மட் அஸ்ரப், மொஹம்மட் இஷாக் மொஹம்மட் நிலாப்தீன் அல்லது அர்ஷாத், குணசீலன் ரவீந்ரன் அல்லது மொஹம்மட் இஷாக், ஷெய்க் மொஹம்மட் பரீக் மொஹம்மட் பெளசி, மொஹம்மட் மொயினுத்தீன் மூசா அல்லது அப்துல்லாஹ் ஆகிய 6 பிரதிவாதிகளுக்கு எதிராகவே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலின் தப்ரபேன் உணவகத்தில் தற்கொலை குண்டுதாரியாக குண்டை வெடிக்கச் செய்த, மொஹம்மட் இப்ரஹீம் இன்ஷாப் அஹமட்டின் ஆலோசனைக்கு அமைய கடந்த 2018 ஜனவரி முதலாம் திகதிக்கும் மார்ச் 30 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குண்டு தயாரித்துள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டு சட்ட மா அதிபரால் முன் வைக்கப்பட்டுள்ளது.
முதலாவது பிரதிவாதிக்காக சட்டத்தரணி மொஹம்மட் பஸீர் ஆஜரான நிலையில் ஏனைய ஐவர் சார்பிலும் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் மற்றும் சட்டத்தரணி ரிஸ்வான் உவைஸ் ஆகியோர் ஆஜராகினர்.
பிரதிவாதிகள் சுமார் 3 வருடங்களாக விளக்கமறியலில் இருக்கும் நிலையில், பிணை தொடர்பில் நேற்று வாதங்களை முன் வைக்க எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த போதும், அரச சட்டவாதி தயாராக இல்லாமையால் அது குறித்து வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM