நட்சத்திர பழம் பற்றி நிறைய பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த பழம் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், மியான்மார், இந்தோனேசியாவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது.
இதன் வடிவம் நட்சத்திரம் போல் இருப்பதால் அதனை நட்சத்திர பழம் என அழைக்கின்றனர்.
மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும் இது இனிப்பும், புளிப்பும் கலந்த சுவை கொண்டது.
குளிர் காலத்தில் ஏற்படும் நோய்களை தீர்க்கும் குணம் கொண்டதால் இது அவுஸ்திரேலியா, தென் அமெரிக்கா, ஹவாய், புளோரிடா தீவுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த பழம் குறைந்த விலையில் கிடைக்கும். இதனை நேரடியாக சாப்பிடலாம். உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிரம்பிய பழங்களுள் இதுவும் ஒன்று.
குளிர்காலமே இதன் சீசன் ஆகும். இந்த காலங்களில் ஸ்டார் பழத்தை வாங்கி சாப்பிட்டால் மூக்கடைப்பு, சளி, குளிர்காய்ச்சல் மற்றும் நீர் வழி பரவும் நோய்கள் குணமாகும். அதேபோல், மழைக்கால சரும பாதிப்புகளில் இருந்து விடுபடவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் நட்சத்திர பழம் உதவுகிறது.
இந்த நட்சத்திர பழம் நரம்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது. இப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலம் பெறும், ரத்த ஓட்டம் சீர்படும். அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த தீர்வாகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM