மன அழுத்தம், ரத்த அழுத்தம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கண்களிலும் அழுத்தம் ஏற்படும் என்பதை பலரும் அறிந்திருக்க மாட்டோம்.
கண்களில் 'அக்வஸ் ஹூமர்' என்ற திரவம் இருக்கும். இது கண்களில் உள்ள 'லென்ஸ்'களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதுடன், கண்களில் உண்டாகும் அழுத்தத்தை சீராக பராமரிக்கவும் உதவும்.
இந்த திரவமானது கண்களில் இருந்து தானாக வெளியேறும். பின்பு மீண்டும் புதிதாக உற்பத்தியாகும்.
சில நேரங்களில் 'அக்வஸ் ஹூமர்' திரவம் கண்ணில் நீராக தேங்கி நிற்கும். அவ்வாறு தேங்கும்போது, பார்வை நரம்பை பாதித்து, கண்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். சிறிது சிறிதாக இந்த அழுத்தம் அதிகரித்து பார்வை இழப்பைக் கூட உண்டாக்கலாம்.
குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நோய்களின் பட்டியலில் இதுவும் ஒன்று.
காரணங்கள்: பரம்பரை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வயது முதிர்ச்சி, ரத்த ஓட்டத்தைப் பாதிக்கக்கூடிய நோய்களான ஒற்றைத் தலைவலி, குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரைநோய் போன்ற பிரச்சினைகள் இருப்பது, கண்ணில் அடிபடுதல் மற்றும் ஸ்டிராய்டு மருந்துகள் அடிக்கடி சாப்பிடுவது போன்ற காரணங்களால் கண்களில் அழுத்தம் அதிகரிக்கும்.
அறிகுறிகள்: பார்வையில் மாற்றம் ஏற்படுதல், அடிக்கடி கண்ணாடி மாற்றும் நிலை, பக்கவாட்டுப் பார்வையில் கோளாறு, வண்ண ஒளி வட்டம் தெரிதல். சிகிச்சை: 40 வயதை கடந்தவர்கள் வருடம் ஒரு முறை கண்பார்வை பரிசோதனை செய்வதன் மூலம், கண்ணில் ஏற்படும் அழுத்தப் பிரச்சினையைக் கண்டறிய முடியும்.
10 முதல் 21 எம்.எம் எச்.ஜி வரை கண்ணில் சராசரியாக அழுத்தம் இருக்கலாம். அதற்கு மேல் செல்லும்போது கட்டாயம் கண் அழுத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
கண்களில் தேங்கும் திரவத்தின் உற்பத்தியை குறைப்பது அல்லது வெளியேற்றுவதன் மூலம், கண் அழுத்தத்தைக் குறைக்க முடியும்.
இதற்கென சிறப்பு 'கிளாக்கோமா கண் சொட்டு மருந்து சிகிச்சை' மேற்கொள்ளப்படும். கண் மருத்துவரின் அறிவுரைப்படி, தினமும் இந்த சொட்டு மருந்து சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
வராமல் தடுக்க:
* விட்டமின் ஏ, பி, சி, ஈ மற்றும் கே, துத்தநாகம், செம்பு, செலினியம் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும்.
* தினசரி கண்களுக்கான பயிற்சிகள் செய்யலாம்.
* கொபின் நிறைந்த பானங்கள், கார்பனேற்றம் செய்யப்பட்ட பானங்கள் பருகுவதைத் தவிர்க்க வேண்டும்.
* மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் கண்களில் அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM