'லாக்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு

Published By: Digital Desk 5

10 Jan, 2023 | 09:54 AM
image

இசையமைப்பாளர் விக்ரம் செல்வா இசையில் உருவான 'லாக்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

படத்தின் இசையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா முத்தரசன் மற்றும் இயக்குநர் கே. பாக்யராஜ் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

'அட்டு' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ரத்தன் லிங்கா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'லாக்'.

நடிகை மதுஸ்ரீ இப்படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். நந்தா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விக்ரம் செல்வா இசையமைத்திருக்கிறார். 

சைக்கோ திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ், அல்முராட் மற்றும் சக்திவேல் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன. இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' பெண்கள் தங்களை தாங்களே சுயமாக தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த திரைப்படம் சைக்கோ திரில்லராக தயாராகி இருக்கிறது.

20 நிமிட உச்சகட்ட காட்சியில் வசனங்கள் இல்லாமல் பின்னணி இசை மற்றும் எக்சன் காட்சிகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களை கவரும் என உறுதியாக நம்புகிறேன்'' என்றார்.

படத்தின் தயாரிப்பாளரான அல்முராட் நிறுவனர் ராஜ்குமார் வேலுசாமி பேசுகையில், '' இயக்குநரின் திறமையைக் கண்டு அவரை தொடர்பு கொண்டேன். பிறகு அவருடனான சந்திப்பில் திரைப்பட நிறுவனம் ஒன்றை தொடங்கவும் தீர்மானித்தோம். 

பாம்பூ ட்ரீஸ் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, ஆண்டிற்கு ஐந்து திரைப்படங்களை தயாரிப்பது என்றும், புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்றும் தீர்மானித்து, இயக்குநர் ரத்தன் லிங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய பிரதாப் என்பவருக்கு முதல் படத்தை இயக்கும் வாய்ப்பளித்திருக்கிறோம். 'லாக்' திரைப்படத்திற்கும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37