குருதி, வியர்வை, கண்ணீர் கலந்த உழைப்பின் மூலம் மலையக தோட்டத்தொழிலாளர்கள் இலங்கைக்கு உலக வரைபடத்தில் தனியிடத்தை பெற்றுக்கொடுத்தார்கள் என எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்ர்ஸ் சிலோன் லிமிட்டெட்டின் நிர்வாக இயக்குநர் குமார் நடேசன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கு wion வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய தூதரகம் எங்களிற்கு உதவவேண்டும் என நாங்கள் கருதுகின்றோம் ஏனென்றால் நாம் இந்திய வம்சாவளித் தமிழர்கள்.
கேள்வி ; இலங்கைக்கான இந்திய வம்சாவளி தமிழர்களின் மிகப்பெரிய பங்களிப்பு என்ன?
பதில் ; உங்களுக்கு சிலோன் தேயிலை என்ற சொல்லை பற்றி தெரிந்திருந்திருக்கும்.
பிரிட்டிஸ் ஆட்சியாளர்களால் இலங்கையின் தேயிலை தோட்டங்களில் வேலைபார்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட இந்த தொழிலாளர்கள் தங்களுடைய வியர்வை கலந்த குருதியினால் இலங்கைக்கு உலகின் வரைபடத்தில் ஒரு இடத்தை பெற்றுக்கொடுத்தார்கள்.
இங்கிலாந்தின் மன்னர் தேநீர் அருந்துகின்றார். அவர் இலங்கையின் தேயிலை தோட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலையில் இருந்து தயாரிக்கப்பட்ட தேநீரை அருந்தக்கூடும்.
அவர்கள் இலங்கைக்கான ஒரு பெயரை கட்டியெழுப்புவதற்கு பெரும் பங்களிப்பை செய்துள்ளனர்.
அவர்கள் இலங்கையில் வீதிகள், பாலங்கள், புகையிரதப் பாதைகளை அமைப்பதற்கும் பங்களிப்பு வழங்கியுள்ளனர்.
பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் தங்களின் வேலைகளை செய்வதற்கு இந்திய வம்சாவளி தமிழர்களை அதிகளவு பயன்படுத்தியுள்ளனர்.
கேள்வி ; தமிழ் சமூகத்திற்கான உங்களின் பணி குறித்து பார்க்கும் போது இந்த புறக்கணிக்கப்பட்ட சமூகத்திற்கு ஆதரவளிப்பதற்காக நீங்கள் இந்திய - இலங்கை அரசாங்கங்களுடன் எவ்வாறு இணைந்து பணியாற்றியுள்ளீர்கள்?
பதில் ; மக்களால் தெரிவுசெய்யப்பட்ட எங்களின் பிரதிநிதிகள் இது தொடர்பில் அரசாங்கங்களுடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
நாங்கள் அரசாங்கங்களுடன் அவ்வாறான நேரடி தொடர்புகளில் ஈடுபடவில்லை ஏனென்றால் நாங்கள் அரசசார்பற்ற நிறுவனங்களை சேர்ந்தவர்கள்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் உரிமைகள் பிரஜாவுரிமை போன்றவற்றை பெறுவதில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றனர்.
இந்திய வம்சாவளித்தமிழர்கள் பல வருடங்களாக இலங்கை பிரஜாவுரிமை அற்றவர்களாக காணப்பட்டார்கள்.
1971-72 ம் ஆண்டுகளிலும் இறுதியாக 1978 ஆம் ஆண்டிலும் அவர்கள் முழுமையான பிரஜாவுரிமையை பெற்றார்கள்.
ஆகவே, நாங்கள் அனைவரும் தற்போது இலங்கையின் பிரஜைகள் இது நான்காவது தலைமுறை. அவர்கள் எவ்வளவு காலம் பிரஜாவுரிமைக்காக காத்திருக்கவேண்டியிருந்தது என்பதை புரிந்துகொள்ளமுடியும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட எங்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் காரணமாக இந்திய வம்சாவளி தமிழர்கள் தற்போது சமஉரிமையை அனுபவிக்கின்றனர்.
இலங்கை அரசாங்கம் அதிகளவு செயற்பாடுகளை மேற்கொள்கின்றது என என்னால் தெரிவிக்க முடியும் ஆனால் இதனை விட அதிகமாக செய்யமுடியும்.
இந்திய தூதரகம் எங்களிற்கு உதவவேண்டும் என நாங்கள் கருதுகின்றோம் ஏனென்றால் இந்திய வம்சாவளித்தமிழர்கள்.
இந்தியா அதனை செய்துள்ளது. இந்திய பிரதமர் மோடியின் அயல்நாட்டு கொள்கை காரணமாக இந்த மக்களிற்கு உதவும் விதத்திலும் அமைந்துள்ளது.
இலங்கைக்கு கடன் எரிபொருள் மருந்துகளை வழங்குவதுடன் மாத்திரமல்லாமல் இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களிற்கும் உதவியுள்ளனர்.
உதாரணத்திற்கு இந்திய அரசாங்கம் வைத்தியசாலைகளை கட்டியுள்ளது. இந்திய அரசாங்கம் ஆதரவளிக்கும் பாடசாலைகள் உள்ளன. வீடுகள் கட்டப்பட்டுள்ளன இதுவரை 14,000 வீடுகள் இந்த தொழிலாளர்களிற்காக கட்டப்பட்டுள்ளன.
ஆகவே, மாற்றமொன்று இடம்பெறுகின்றது. நாங்களும் இதனை நோக்கி செயற்படவேண்டும்.
இந்திய தூதரகம். இலங்கைக்கான இந்தியஉயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த விடயத்தில் மிகவும் முற்போக்கான நோக்கம் கொண்டவராக காணப்படுகின்றார்.
இந்த விவகாரம் குறித்து நாங்கள் அனைவரும் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அங்கீகரித்திருக்காவிட்டால் எனக்கு இந்த உயர் விருது கிடைத்திருக்காது.நான் இந்த முழு குழுவின் ஒரு வெளிப்பாடு மாத்திரமே.
கேள்வி ; இலங்கை தனது வரலாற்றில் எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடி இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளித்தமிழர்களிற்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது - இதிலிருந்து மீள்வதற்கான வழிஎன்ன?
பதில் ; ஆம், விவகாரங்கள் என்னவென்றால் முன்னைய அரசாங்கம் உரங்களை தடை செய்தது – நிறுத்தியது.இது தோட்டதொழில்துறைக்கு மிகப்பெரிய பாதிப்பாகும்.
ஏனென்றால் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டதுஇகுறைந்தளவு விளைச்சலே கிடைத்ததுஇ காய்கறி பயிர்ச்செய்கையை முன்னெடுக்க முடியவில்லைஇ
ஆகவே இதுசிறிய வீட்டுத்தோட்டங்களை கொண்டுள்ள இந்திய வம்சாவளி தமிழர் உட்பட மக்களின் விவசாயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்திய அரசாங்கத்துடன் இணைந்து சிறிய பால்பண்ணைகள் விவசாய தோட்டப்பண்ணைகளை உருவாக்கமுடியும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்இ இவை அனைத்தும் சாத்தியங்கள்.
இலங்கைக்கான இந்திய தூதுவரை அணுகி இந்தியாவின் உதவியை கோருவதற்கு நாங்கள் எதிர்பார்த்துள்ள விடயங்களில் இவை சில.
அருங்காட்சியகம் மூலம் இந்திய நெறிமுறைகளை மக்கள் முன் எவ்வாறு கொண்டு செல்வது மக்களிற்கு எவ்வாறு தெரியப்படுத்துவது என்ற கோணத்திலும் நாங்கள் சிந்தித்து வருகின்றோம்.
இதன் மூலம் இந்த மக்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதை அவர்களிற்கு காண்பிக்க முடியும்.
இன்று இந்திய வம்சாவளிதமிழர்களின் சிறுவர்களை- பிள்ளைகளை நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என கேட்டால் அவர்கள் மலையகத்தின் சிறிய நகரமொன்றை குறிப்பிட்டு அங்கிருந்து வந்ததாக தெரிவிப்பார்கள்.
அவர்களை எவ்வாறு அவர்களின் வேர்களிற்கு கொண்டு செல்வது? அவர்களிற்கு அவர்களின் முன்னோர்கள் இந்தியாவில் இந்த பகுதிகளில் பெருமையுடன் வாழ்ந்தார்கள் என எப்படி தெரிவிப்பது?
வேர்கள் முன்னோர்கள் பரம்பரை என்ற கருத்தினை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு அருங்காட்சியகம் இடமொன்றை உருவாக்க விரும்புகின்றோம்.அவர்களிற்கு அந்த பெருமையை மீண்டும் வழங்கி அவர்கள் தேயிலை செடிகளின் பின்னாலிருந்து மையநீரோட்டத்திற்கு வர செய்ய விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM