சுப்பர் ஸ்டாரின் 'ஜெயிலர்' படத்தில் இணைந்த மோகன்லால்

Published By: Nanthini

09 Jan, 2023 | 07:25 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் 'ஜெயிலர்' எனும் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் மலையாள சுப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் நடிக்கிறார் என படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடித்துவரும் இந்த படத்தில் கன்னட திரையுலகின் சுப்பர் ஸ்டாரான சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். 

இவருடன் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. 

இந்நிலையில் இதனை படக்குழுவினரும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். மேலும், இது தொடர்பாக படப்பிடிப்பில் மோகன்லால் பங்கு பற்றிய புகைப்படத்தினையும் வெளியிட்டிருக்கிறார்கள். இதன் மூலம் முதன்முறையாக நடிகர் மோகன்லால், சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறார்.

தமிழ், மலையாளம், கன்னடம் என மூன்று மொழிகளில் சுப்பர் ஸ்டாராக இருக்கும் நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருப்பதால், 'ஜெயிலர்' படத்துக்கு வணிக ரீதியான ஆதரவு அதிகளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37