அருள்நிதி கதையின் நாயகனாக நடிக்கும் 'டிமான்டி காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களின் தோற்றப் புகைப்படங்களை கியூ.ஆர். கோட் எனும் புதிய பாணியில் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்குநராக அறிமுகமான திரைப்படம் 'டிமான்டி காலனி'. ஹொரர், த்ரில்லர் ஜேனரில் தயாரான இந்த திரைப்படம் புதிய பாணிலான கதை சொல்லும் உத்தியால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து, வெற்றி பெற்றது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் உருவாக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்களுடன் நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், அருண் பாண்டியன், முத்துக்குமரன், சர்ஜானோ காலித், அர்ச்சனா, அன்ட்டி ஜாஸிக்கிலைனின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
தீபக் டி மேனன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
ஹொரர், த்ரில்லராக தயாராகும் இந்த படத்தை ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து, படத்தொகுப்பாளர் காசி விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
'டிமான்டி காலனி 2' படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் நிறைவடைந்திருப்பதாகவும், மீதமுள்ள படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
'இருள் ஆளப்போகிறது' என வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்திய படக்குழு, இது தொடர்பான ஆர்வத்தை ஏற்படுத்திய பிறகு, 'டிமான்டி காலனி 2' படத்தில் நடித்திருக்கும் கதாபாத்திரங்களின் தோற்றப் புகைப்படங்களை நவீன பணிகள் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்கள்.
இதனிடையே டிமான்டி காலனி படத்தின் முதல் பாகத்தை போலவே இந்த பாகமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM