(நா.தனுஜா)
இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான சந்தையை விரிவுபடுத்துவதை இலக்காகக் கொண்டு அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் இலங்கை மற்றும் தாய்லாந்து அதிகாரிகளுக்கு இடையிலான மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை இன்று திங்கட்கிழமை (9) கொழும்பில் ஆரம்பமானது.
இப்பேச்சுவார்த்தை நாளையும் தொடரவுள்ள நிலையில், இதில் கலந்துகொள்வதற்காக தாய்லாந்து நாட்டின் சார்பில் ஒர்மன் சப்தவீதம் தலைமையில் 26 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளது. அதேவேளை இலங்கை சார்பில் கே.ஜே.வீரசிங்க தலைமையிலான குழுவினர் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.
இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான சந்தையை விரிவுபடுத்துவதை இலக்காகக் கொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தமொன்றை இந்தியா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிடம் இலங்கை அரசாங்கம் முன்மொழிந்திருந்த நிலையில், முதலாவதாக தாய்லாந்து அதற்குச் சாதகமான பிரதிபலிப்பை வெளிக்காட்டியது. அதன்படி, முதலாம் மற்றும் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தைகளை அடுத்து மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை இன்று ஆரம்பமானது.
இப்பேச்சுவார்த்தையின்போது பொருள்சார் வர்த்தகம், சேவைசார் வர்த்தகம், முதலீடுகள், மூலப்பொருள் விதிகள், சுங்க ஒத்துழைப்பு, வர்த்தக வசதிகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஆகிய 7 விடயங்கள் தொடர்பில் விசேடமாக கலந்துரையாடப்பட்டன.
இவ்வாறானதொரு பின்னணியில் இச்சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்வரும் 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM