இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபட்டுவருவதால் வருடத்துக்கு 9 ஆயிரம் மில்லியன் ரூபாய் இலங்கைக்கு நஷ்டம் ஏற்படுவதாக மீன்பிடி மற்றும் கடற்றொழில் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை கடற்பரப்பில் ஒருவாரத்துக்குள் இந்திய மீனவர்கள்  சுமார் 6000 டொன் மீன்களை பிடிக்கின்றனர். 

அதுமாத்தரமின்றி ஒருவாரத்துக்குள் 3 இந்திய படகுகள் என ஒருவருடத்துக்கு 5000 மீன்பிடி படகுகள் சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பினுள் நுளைந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றன.

இந்நிலையில் இலங்கை கடற்படையினரின் உயர்மட்ட பாதுகாப்பு காரணமாக அத்துமீறி நுளையும் இந்திய படகுகளின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது எனவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.