தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக பொதுச் சொத்துக்களை சட்டத்திற்கு முரணாகப் பயன்படுத்தக் கூடும் - பெப்ரல்

Published By: Digital Desk 3

10 Jan, 2023 | 09:28 AM
image

(எம்.மனோசித்ரா)

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக தற்போதைய உறுப்பினர்கள் பொது சொத்துக்களை சட்டத்திற்கு முரணாகப் பயன்படுத்தக் கூடும். எனவே இவற்றைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பெப்ரல் அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் பெப்ரல் அமைப்பினால் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கோரப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதியின் பின்னர் சகல கட்சிகளும் தமது பிரசார நடவடிக்கைகளை ஆரம்பிக்கும். தேர்தல் நிறைவடையும் வரை அந்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.

எனினும் இந்தக் காலப்பகுதியில் 340 உள்ளூராட்சி மன்றங்களும் இயங்கி வருகின்ற நிலையில் , மாநகரசபைகளின் மேயர்கள், தவிசாளர்கள் , உறுப்பினர்கள் எனப் பலர் போட்டியிடுவதால் அவர்கள் தமது அரசியல் அதிகாரத்தை சட்ட விரோதமாக பயன்படுத்தக் கூடும்.

குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் ஏனைய வளங்களைத் இவர்கள் தமது தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்துவதாக எமக்கு ஏற்கனவே முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் வரை எவரும் வேட்பாளராக இல்லாவிட்டாலும் சில உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தாம் வேட்பாளர்கள் என்பதை அறிந்தும் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவது ஆரம்பம் முதலே தேர்தல் சட்டங்களை மதிக்காத செயலாகும்.

அத்தோடு உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் , நலன்புரி திட்டங்கள் , வீதி அபிவிருத்திகள் போன்றவற்றுக்கு அரச வளங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் தேர்தலில் கூடுதல் அனுகூலத்தைப் பெற முடியும். இதுவும் பொது சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவதேயாகும்.

எனவே, வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் என்பன உள்ளூராட்சி மன்றங்களின் வளங்கள் மற்றும் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுப்பதற்கு சிறந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக...

2026-04-15 02:19:11
news-image

களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை...

2026-04-14 23:42:34
news-image

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ்...

2026-04-14 19:57:56
news-image

வென்னப்புவ பகுதியில் 'ஹைடொப் துஷார'வின் பிரதான...

2026-04-14 17:38:09
news-image

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக...

2026-04-14 17:20:25
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-04-14 15:14:44
news-image

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி...

2026-04-14 15:06:44
news-image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின்...

2026-04-14 14:56:42
news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07