பெயர்: புது வருடம்.
கொண்டாடப்படும் நாள்: பெரும்பாலான நாடுகளில் ஜனவரி 1.
வரலாறு: சுமார் 4 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே மொசபதேமியாவில் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக வரலாறு சொல்கிறது. ஆனால், மார்ச் மத்தியில் புதுவருடம் கொண்டாடப்பட்டது. மற்ற நாடுகளில் வெவ்வேறு மாதங்களில் புது வருடப் பிறப்பு கொண்டாடப்பட்டன.
எல்லா நாடுகளுக்கும் பொதுவான புத்தாண்டு என்று எதுவுமில்லை. அப்போது வருடத்துக்குக் கூட பத்து மாதங்கள் மட்டுமே கணக்கிடப்பட்டன.
கி.மு.700 வரையிலுமே ஜனவரி, பெப்ரவரி மாதங்கள் இல்லை. ரோமின் இரண்டாவது பேரரசரான நுமாதான் கலண்டரில் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதத்தை இணைத்தார்.
ரோமின் நுழைவாயில் கடவுளான ஜனுஸின் பெயரிலிருந்து உருவானதுதான் ஜனவரி. அதாவது வருடத்தின் ஆரம்பத்தைக் குறிப்பதற்காக இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
கி.மு 153ஆம் வருடம் ரோமில் உள்ள ஒருசில இடங்களில் ஜனவரி முதலாம் திகதி புதுவருடமாக கொண்டாடப்பட்டது.
கி.மு.எண்பதுகளில் ஜனவரி 1ஆம் திகதி ரோமில் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து ஜனவரி முதலாம் திகதியை புதுவருடத்தின் ஆரம்ப நாளாக பலரும் ஏற்றுக்கொண்டு புதுவருடத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
தீர்மானம்: புது வருடத்தையும் தீர்மானங்களையும் பிரிக்க முடியாது. உலகம் முழுவதும் உடல் நலத்தைப் பாதுகாக்கும் விஷயங்களையே அதிகமானோர் தீர்மானங்களாக எடுக்கின்றனர்.
உதாரணத்துக்கு, புது வருடத்திலிருந்து மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தலைக் கைவிடுவது, எடைக்குறைப்பு, நடைப் பயிற்சி மேற்கொள்வது, உடற்பயிற்சிக் கூடத்துக்குச் செல்வது... என தீர்மானங்கள் நீள்கின்றன.
ஜனவரி முதலாம் திகதியிலிருந்து எடுக்கப்படும் தீர்மானங்களில் 80 சதவீத தீர்மானங்கள் பெப்ரவரியிலேயே கைவிடப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்காவில் 45 சதவீதத்தினர் புத்தாண்டு தீர்மானங்களை மேற்கொள்கின்றனர். இதில் 25 சதவீதம் பேர் தங்களது தீர்மானங்களை ஜனவரி இரண்டாம் வாரத்திலேயே கைவிட்டுவிடுகின்றனர்.
சிலி: புது வருடம் ஆரம்பிக்கும் நள்ளிரவில் அன்புக்குரியவர்களின் சமாதிக்கு பக்கத்தில் உறங்கி, இறந்து போனவர்களுக்குத் துணையாக இருப்பது சிலியில் கடைப்பிடிக்கப்படும் புதுவருட மரபுகளில் ஒன்று.
இது தவிர, காலி சூட்கேஸை எடுத்துக்கொண்டு தெருத்தெருவாக நடப்பார்கள் சிலி மக்கள். புத்தாண்டு அன்று அப்படி நடப்பதால் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கான அதிர்ஷ்டம் அடிக்குமாம். இப்படி வேகமாக நடப்பவர்கள், தொலைதூரம் பயணம் செய்வார்கள் என்பது சிலி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
சீனா: சீனாவில் புதுவருடக் கொண்டாட்டம் 15 நாட்களுக்கு நீடிக்கிறது. ஒவ்வொரு வருடமும் வெவ்வேறான திகதிகளில் கொண்டாடப்படுகிறது. நிலவின் அமைப்பை வைத்து ஜனவரி இறுதியில் அல்லது பெப்ரவரியின் மத்தியில் இந்த கொண்டாட்டம் அரங்கேறுகிறது.
ஸ்கொட்லாந்து: கிறிஸ்துமஸ் முடிந்த இரண்டாவது நாளிலிருந்தே புத்தாண்டுக் கொண்டாட்டம் ஆரம்பமாகிவிடும். ஒரு பாரம்பரிய திருவிழாவைப் போல ஐந்து நாட்களுக்கு புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள் ஸ்கொட்லாந்து மக்கள். போர்வீரர்களைப் போல உடை அணிந்துகொண்டு கையில் தீப்பந்தத்தை ஏந்தி தெருவில் ஊர்வலம் வருவது இதில் முக்கியமான நிகழ்வு.
புது வருடம் ஆரம்பிக்கும் நாட்களில் தெருக்களில் கும்பலாக நெருப்பைச் சுழற்றி வருவதால் தீய சக்திகள் விரட்டியடிக்கப்படும் என்று ஸ்கொட்லாந்து மக்கள் நம்புகிறார்கள்.
ருமேனியா: புது வருடத்தின் முதல் நாளில் ருமேனியா விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளிடம் பேச்சுக் கொடுப்பார்கள். விவசாயிகள் பேசியதற்கு பதில் அளிப்பதைப் போல கால்நடைகள் சத்தம் எழுப்பினால் நல்ல சகுனமாம். இதுபோக நாணயங்களை ஆற்றில் வீசுவார்கள். வீடுவீடாகச் சென்று நடனமாடி இசைக்கருவிகளை இசைப்பது ருமேனியர்களின் வழக்கம். இந்த விநோத கொண்டாட்டம் முன்னூறு ஆண்டுகளுக்கு மேலாக அங்கே நடைபெற்றுவருகிறது.
தென்னாப்பிரிக்கா: ஜோகன்னஸ்பர்க் நகரில் வீட்டிலுள்ள பழைய மரச்சாமான்களை, பாத்திரங்களை, துணிகளை வெளியே வீசுவது புத்தாண்டு வழக்கம். இப்படிச் செய்வதால் பழைய விஷயங்கள் அழிந்து புதியன புகும் என்பது அவர்களது நம்பிக்கை. இதற்கு தடைகளும், கட்டுப்பாடுகளும் இருந்தாலும் பர்னிச்சரை உடைப்பதை தென்னாப்பிரிக்க மக்கள் இன்னும் கைவிடவில்லை.
ஸ்பெயின்: ஸ்பெயினின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் அடிநாதமே 12 திராட்சைகளைச் சாப்பிடுவதுதான். புத்தாண்டு பிறப்பதற்கு 12 நொடிகள் இருக்கும்போது ஒவ்வொரு நொடிக்கும் ஒரு திராட்சை என்று 12 திராட்சைகளை வேகமாகச் சாப்பிட வேண்டும். 12 நொடிக்குள் 12 திராட்சைகளைச் சாப்பிட்டு விட்டால் அடுத்து வருகிற 12 மாதங்களும் சிறப்பாக இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
100 வருடங்களுக்கும் மேலாக இந்த வழக்கம் ஸ்பெயினில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. புத்தாண்டில் எதை மறந்தாலும் திராட்சை சாப்பிடுவதை ஸ்பெயின்வாசிகள் மறக்கமாட்டார்கள். ஸ்பெயினில் ஒரு வருடத்தில் முதல் 11 மாதங்களில் விற்பனையாகும் திராட்சைகளைவிட, வருடத்தின் இறுதி வாரத்தில் விற்பனையாகும் திராட்சைகளின் அளவு அதிகம்.
கிரீஸ்: புது வருடத்தின் முதல் நாளன்று வீட்டுக்கு வருகின்ற முதல் விருந்தாளிதான் அதிர்ஷ்டத்தையும், துரதிர்ஷ்டத்தையும் கொண்டு வருகின்றனர் என்பது கிரீஸ் மக்களின் நம்பிக்கை.
அதனால் முதலில் வீட்டுக்கு யாரை அழைப்பது என்பதில் இன்றும்கூட கவனமாக இருக்கின்றனர்.
ரஷ்யா: புதுவருடத்தன்று ரஷ்யர்கள் தங்களின் விருப்பங்களை ஒரு காகிதத்தில் எழுதுவார்கள். பிறகு அந்தக் காகிதத்தைத் தீயிலிட்டு எரித்துவிடுகின்றனர். காகிதம் முழுமையாக எரிந்தபிறகு கிடைக்கும் சாம்பலை சாம்பெய்னுடன் கலந்துகுடித்து புதுவருடத்தை வரவேற்கின்றனர். இப்படிச் செய்வதால் விருப்பங்கள் நிறைவேறும் என்பது ரஷ்யர்களின் நம்பிக்கை.
கிரிபிதி: மத்திய பசிபிக் பெருங்கடலில் வீற்றிருக்கும் கிரிபிதி தீவில்தான் முதலில் புதுவருடம் கொண்டாடப்படுகிறது.
திருட்டு: உலகம் முழுவதும் புது வருடத்தின் போது அதிக அளவில் வாகனத் திருட்டுகள் நடக்கின்றன.
எத்தியோப்பியா: செப்டம்பர் 11 ஆம் திகதியைத்தான் புது வருடமாக எத்தியோப்பியர்கள் கொண்டாடுகின்றனர். அங்கே வருடத்துக்கு 13 மாதங்கள்.
டென்மார்க்: புது வருடத்தன்று வீட்டி லுள்ள தட்டுகளை வெளியே வீசி உடைப்பதால் அதிர்ஷ்டம் வரும் என்பது டென்மார்க் வாசிகளின் நம்பிக்கை.
ஜப்பான்: புது வருடம் ஆரம்பிக்கும் நள்ளிரவின்போது ஜப்பானில் உள்ள அனைத்து புத்த விஹாரைகளிலும் உள்ள மணிகள் 108 முறை ஒலிக்கும். மனிதனின் 108 பலவீனங்களைக் குறிப்பதற்காகவும், அதிலிருந்து அவன் தன்னை விடுவித்துக்கொள்ளவும் இந்த மணி ஒலிக்கிறது.
இந்தியா: ஜனவரி முதலாம் திகதி ஆங்கில வருடப் பிறப்பாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதுபோக மொழி வாரியாகவும் பல்வேறு விதமாகவும் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM