பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் மனங்களில் தனியிடம் : உள்ளூராட்சி தேர்தலில் அமோக வெற்றி கிடைக்கும் - காரியவசம்

Published By: Nanthini

09 Jan, 2023 | 03:06 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் மனங்களில் தனி இடமுண்டு. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நாங்கள் அமோக வெற்றி பெறுவோம். 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு  கொழும்பு மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை திங்கட்கிழமை (9) கொழும்பு மாவட்ட பிரதேச செயலக காரியாலயத்தில் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

பொதுஜன பெரமுனவின் பொருளாதார கொள்கையை நாட்டு மக்கள் புறக்கணிக்கவில்லை. மக்கள் மனங்களில் பொதுஜன பெரமுன தனியிடம் பிடித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகவுள்ளோம். கட்சி என்ற ரீதியில் அமோக வெற்றி பெறுவோம். பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளில் நேரடியாக கலந்துகொண்டுள்ளார்.

அறிவார்ந்த மக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை நிச்சயம் தோற்றுவிப்பார்கள். தேர்தலை கண்டு அஞ்சவேண்டிய தேவை எமக்கு கிடையாது.

கொவிட் பெருந்தொற்று மற்றும் உக்ரைன் - ரஷ்யா யுத்தம் ஆகிய காரணிகளினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் நன்கறிவார்கள்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்.

தேர்தல் நடவடிக்கைகள் இவ்வாரம் முதல் மும்முரமாக முன்னெடுக்கப்படும். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டவிரோத மணல் அகழ்வுகளால் நிலக் கண்ணி...

2023-03-26 20:42:59
news-image

மட்டக்களப்பு வாவியொன்றில் பெண்ணின் சடலம் மீட்பு

2023-03-26 20:40:31
news-image

கடல் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர்...

2023-03-26 20:39:51
news-image

பால் தேநீரின் விலை நாளை முதல்...

2023-03-26 18:19:23
news-image

யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு...

2023-03-26 18:12:21
news-image

2022இல் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை...

2023-03-26 17:45:52
news-image

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த...

2023-03-26 16:46:29
news-image

தாயை கொலை செய்த மகன் 8...

2023-03-26 16:27:09
news-image

மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு ...

2023-03-26 15:45:23
news-image

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்...

2023-03-26 16:05:17
news-image

போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர்...

2023-03-26 14:39:26
news-image

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி...

2023-03-26 14:11:27