தெல்தோட்டை - கேட்வேலி பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (19) இடம்பெற்றுள்ளது.

தோட்டத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு ஆண் உட்பட 8 பெண்கள் இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் தெல்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.