அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் பிரேசிலில் இடம்பெற்ற சம்பவங்களை 2021 இல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது இடம்பெற்ற வன்முறைகளுடன் ஒப்பிட்டுள்ளார்.
பிரேசிலில் ஜனநாயக தேர்தல்கள் இடம்பெற்று ஜனாதிபதியாக லுலா தெரிவு செய்யப்பட்ட பின்னர் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அரசாங்கம்ஜனநாயகத்திற்கு ஆதரவாக உள்ளது என குறிப்பிட்டுள்ள அவுஸ்திரேலிய பிரதமர் தேர்தல் முடிவுகளை மக்கள் வரவேற்கவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிய எண்ணிக்கையிலான மக்களின் செயற்பாடுகளை அரசாங்கம் கண்டிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நெருக்கடியான தருணத்தில் பிரேசில் அரசாங்கத்திற்கு நாங்கள் தொடர்ந்தும் ஆதரவளிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக நாடுகள் தேர்தல்களை நடத்தும்போது நாங்கள் அதனை மதிக்கவேண்டும் ஆனால் துரதிஸ்டவசமாக கடந்த வருடம் அமெரிக்க தேர்தலின் பின்னர் ஜனவரி ஆறாம் திகதிஅமெரிக்க காங்கிரசை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் போன்ற சம்பவங்களை நாங்கள் மீண்டும் பார்த்துள்ளோம் என அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரேசிலில் பாராளுமன்றத்திற்குள் புகுந்த வன்முறையாளர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
பிரேசில் நாட்டில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றிபெற்றார்.
இதையடுத்து, பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக லூயிஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். வாக்கு வித்தியாசம் மிகக்குறைவாக இருந்த நிலையில் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM