(ஏ.என்.ஐ)
வெளிநாட்டில் வாழும் இந்திய சமூகம் உலகிலேயே மிகப்பெரிய, திறமையான புலம்பெயர் சமூகம் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தூரில் நடைபெற்றுவரும் இளைஞர் பிரவாசி பாரதீய திவாஸ் மாநாட்டில் நேற்றைய தினம் (8) தொடக்க உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
இந்திய சமூகத்தின் தனித்துவமானது, இந்தூர் நகரில் நடந்துவரும் பிரவாசி பாரதீய திவாஸ் போன்ற மாநாடுகளால் ஊக்குவிக்கப்படுகிறது.
உலகிலேயே மிகவும் திறமையான புலம்பெயர்ந்தோர் இந்தியாவிலேயே உள்ளனர். மேலும், பலர் மிகவும் திறமையானவர்கள். ஆனால், வெளிநாட்டில் உள்ள இந்திய சமூகத்துக்கும் தாய்நாட்டுக்கும் இடையிலான பிணைப்பின் தீவிரம் எங்களின் தனித்துவமானது.
தற்போது 17ஆவது பிரவாசி பாரதீய திவாஸ் மாநாடு நடைபெறுகிறது. புலம்பெயர்ந்தோர் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு நம்பகமான பங்காளிகளாக உள்ளனர். புலம்பெயர்ந்த இந்தியர்களுடனான இந்த உறவு மிகவும் முக்கியமானது.
இந்திய அரசாங்கம் வந்தே பாரத் மிஷன் மற்றும் தடுப்பூசி மைத்ரி முயற்சித் திட்டங்களை மேற்கொண்டது. அவை புலம்பெயர்ந்தோரை மையமாகக் கொண்ட திட்டங்களாகவும் அணுகப்பட்டன.
எனவே, இன்று நாம் சந்திக்கும்போது, கொவிட் காலத்தில் நாங்கள் சந்தித்த அனைத்து சவால்கள் மற்றும் இன்னல்களின் விளைவாக, எமது பிணைப்புகள் இன்னும் வலுவாகிவிட்டன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM