வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழப்பு

09 Jan, 2023 | 12:10 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில்  நேற்று முன்தினம் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொள்ளுப்பிட்டியில்  பயணித்த ஜீப் வண்டி மீது அதே திசையில் பயணித்த கார் மோதி விபத்து இடம்பெற்றது.  இதன்போது காரின் பின் இருக்கையில் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 22  வயதுடைய  பத்தரமுல்லை பிரதேசத்தை சேர்ந்த ஒருவராவார்.

இதேவேளை, கேகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு - கண்டி வீதியின் 75 ஆவது கட்டை பகுதியில்  இடம்பெற்ற விபத்தில் 55 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த கார் வீதியில் சென்றுக்கொண்டிருந்த பாதசாரி மீது மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும்  மாவனல்லை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணேதென்ன, உடமகத்வர வீதியில் துனுகம கந்த பிரதேசத்தில் துவிச்சக்கர வண்டி கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி கால்வாயில் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது  44 வயதுடைய  ஒருவர் உயிரிழந்தார்.

இதேவேளை ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேகாலை - அவிசாவளை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 45 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவிசாவளையில் இருந்து பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர் திசையில் வந்த துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது  காயமடைந்த துவிச்சக்கரவண்டி செலுத்திய நபர் கரனவெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை பதுரலிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட  அத்வல்தொட்ட அபேகொட வீதியில்  இடம்பெற்ற விபத்தில் 58 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

அத்வல்தோட்டையிலிருந்து அபேகொட நோக்கிச் உரம் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று  வீதியின் குறுக்கே கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது லொறியின் முன் இடது ஆசனத்தில் பயணித்த நபர் லொறியில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். காயமடைந்தவர்  பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

14 வருடங்களாகத் தொடரும் கிழக்குத் தமிழர்களின்...

2024-03-01 23:15:08
news-image

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர்...

2024-03-01 21:58:30
news-image

அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை...

2024-03-01 13:36:14
news-image

நீருக்கு வரி அறவிடப்படமாட்டாது - பவித்ரா...

2024-03-01 13:31:26
news-image

பாதசாரி கடவைக்கு அண்மித்த பகுதியில் வீதியை...

2024-03-01 20:11:47
news-image

திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத...

2024-03-01 20:00:40
news-image

நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது சாந்தனின் பூதவுடல்; நீர்கொழும்பில்...

2024-03-01 19:56:04
news-image

சாந்தன் சொந்த நாட்டுக்கு திரும்புவதில் ஏற்பட்ட...

2024-03-01 18:49:43
news-image

இந்து சமுத்திரத்திற்குள் நாட்டின் பொருளாதாரத் திட்டங்களுக்குப்...

2024-03-01 17:52:47
news-image

யாழ். போதனா வைத்தியசாலை சூழலில் தரித்து...

2024-03-01 17:48:58
news-image

சர்ச்சைக்குரிய இம்யுனோகுளோபுலின் மருந்து கொடுக்கல் -...

2024-03-01 19:10:11
news-image

வெருகல் பிரதேச மக்களுக்கு கிழக்கு ஆளுநர்...

2024-03-01 18:45:49