(இராஜதுரை ஹஷான்)
நடைமுறையில் மக்களாணையுடன் அரசாங்கமொன்று இல்லாத காரணத்தால் சர்வதேசம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருவதில்லை. ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத் தேர்தலை நடத்தி மக்களாணையை உறுதிப்படுத்த வேண்டும்.
அரச நிதியை வீண்விரயமாக்கும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற சபைத் தேர்தல் அவசியமற்றது என மக்கள் பேரவையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (8) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், அவர் இது தொடர்பில் கூறுகையில்,
நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. இவ்வாறான பின்னணியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு மேலும் தீவிரமடையும் என ஆளும் தரப்பினர் குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது.
நாட்டு மீது பற்று கொண்டு இவர்கள் தேர்தல் வேண்டாம் என குறிப்பிடவில்லை. தேர்தலுக்கு சென்றால் அரசாங்கம் படுதோல்வி அடையும் என்பது உறுதி. அதன் காரணமாகவே அரசாங்கம் நிதி நெருக்கடியை குறிப்பிட்டுக்கொண்டு தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதால் பொருளாதாரமொன்றும் முன்னேற்றமடையாது. இருப்பினும், அரசியலமைப்பினால் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய, உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். மக்களின் அடிப்படை உரிமை தேர்தல் ஊடாக பாதுகாக்கப்படும்.
மக்களாணையுடன் அரசாங்கம் என்பதொன்று இல்லாத காரணத்தினால் சர்வதேசம் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வருவதில்லை. இந்த அரசாங்கத்துக்கு மக்களாணை கிடையாது. ஸ்தீரமற்ற அரசாங்கத்தின் மீது சர்வதேசம் நம்பிக்கை கொள்ளாது.
ஆகவே, தற்போதைய நிலையில் சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற வேண்டுமாயின், ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலை நடத்த வேண்டும்.
மாகாண சபை தேர்தலை நடத்தாத காரணத்தினால் அரச நிர்வாகமொன்றும் ஸ்தம்பிதமடையவில்லை.
மாகாண சபை தேர்தல் நடத்தப்படாத காரணத்தினால் அரசாங்கத்துக்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபா மீதமாகியுள்ளது. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 8800ஆக காணப்படுகிறது.
நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தி 8800 உறுப்பினர்களுக்கும் சம்பளம் வழங்குவதால் நாட்டுக்கு நன்மையேதும் கிடைக்காது. ஆகவே, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாட்டுக்கு அவசியமா என்பது தொடர்பில் புதிய மக்களாணையுடன் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM