இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவினை சட்டத்தரணி நாகந்த கொடிதுவக்கு நீதிமன்றத்தில் இன்று (19) தாக்கல் செய்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வரியற்ற வாகன அனுமதிப்பத்திரங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில்  முன்வைக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பதற்காக குறித்த மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட 96 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.