கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிலாபம் பொலிஸில் கடமையாற்றிய குறித்த பொலிஸ் சர்ஜன்ட் மேலும் நால்வருடன் இணைந்தே பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தமது பொலிஸ் பகுதியில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த லொறியை நிறுத்தி சுமார் 30 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் மோட்டார் சைக்கிளுடன் மக்குலுகஸ்வெவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு ஹிரானேகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே இந்த கொள்ளை சம்பவத்துடன் பொலிஸ் சர்ஜன்ட் ஒருவருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM