அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவின் மகன் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

விபத்து ஒன்று தொடர்பில் இவருக்கு இன்று (19) குறித்த பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (18) அதிகாலை அனாகரிக தர்மபால வீதியில் லக்ஷ்மன் யாப்பாவின் மகன் செலுத்திய ஜீப் ரக வாகனம் மோட்டார் சைக்கிளொன்றில் மோதியதில் 21 வயதான இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.