ஒம்லெட் சீஸ் சாண்ட்விச்

Published By: Ponmalar

07 Jan, 2023 | 06:08 PM
image

தேவையான பொருட்கள்: 

பிரெட் - 4 

பச்சை மிளகாய் - 1 

வெங்காயம் - 1 

கொத்தமல்லி இலை - தேவையான அளவு 

சீஸ் ஸ்லைஸ் - விருப்பத்திற்கேற்ப 

சில்லி ஃபிளேக்ஸ் - விருப்பத்திற்கேற்ப 

வெண்ணெய் - தேவையான அளவு 

எண்ணெய் - தேவையான அளவு 

முட்டை கலவை செய்ய முட்டை - 3 

வெங்காயம் - 1 

பச்சை மிளகாய் - 2 

கொத்தமல்லி இலை - சிறிதளவு 

உப்பு - தேவையான அளவு 

மிளகு தூள் - தேவையான அளவு 

செய்முறை: 

  • பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். 
  • 2 பிரெட் துண்டுகளை எடுத்து அதில் ஒன்றின் மீது சீஸ் ஸ்லைஸ் வைத்து, சில்லி ஃபிளேக்ஸ் தூவவும். 
  • மற்றொரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடவும். 
  • தாவாவை அடுப்பில் வைத்து சூடு செய்து, வெண்ணெய் சேர்த்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை டோஸ்ட் செய்யவும். 
  • ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும். 
  • தாவாவை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை கலவையை ஊற்றி அதன் மேல் டோஸ்ட் செய்த சாண்ட்விச்சை வைக்கவும். 
  • சாண்ட்விச் முழுவதும் ஒம்லெட் வரும் படி மூடவும். நன்றாக வேக விடவும். 
  • கடைசியாக அடுப்பிலிருந்து எடுத்து பாதியாக நறுக்கவும். 
  • இப்போது அருமையான ஒம்லெட் சீஸ் சாண்ட்விச் தயார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்