ஜீ.வி. பிரகாஷ் குமார், பாரதிராஜா இணைந்து நடித்திருக்கும் 'கள்வன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் தனுஷ் தன் இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
'முண்டாசுப்பட்டி', 'மரகத நாணயம்', 'ராட்சசன்' ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் பி.வி. சங்கர் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'கள்வன்'. இதில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக 'லவ் டுடே' புகழ் நடிகை இவானா நடித்திருக்கிறார். இவர்களுடன் பாரதிராஜா, நடிகர் சாய் தீனா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இயக்குநரான பி.வி. சங்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு கதாநாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
காடும், காடு சார்ந்த மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ஆக்ஸிஸ் ஃபிலிம் ஃபெக்டரி பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதற்கான மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது.
அவற்றில் அடர்ந்த வனப்பகுதியில் களவாடுவதை தொழிலாக கொண்டிருக்கும் ஒரு குடும்பம், அதற்கு பாதுகாவலாக இருக்கும் யானைக் கூட்டத்தைப் பற்றிய காட்சிகளும் இடம்பெற்றிருப்பதால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
இந்தப் படம் இவ்வருடம் கோடைகால விடுமுறையில் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM