ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் கொல்லப்பட்டிருக்க கூடாது என அவரை விசாரணைக்குட்படுத்திய அதிகாரியான ஜோன் நிக்ஸன் தெரிவித்துள்ளார்.
சதாம் ஹுசைனை விசாரணைக்குட்படுத்திய ஜோன் நிக்ஸன் எழுதியுள்ள Debriefing The President: The Interrogation Of Saddam Hussein எனும் நூலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சதாம் ஹுசைன் தன்னிடம்" அமெரிக்கா நினைப்பதை போன்று அரபு மொழியையும் எம்மக்களையும் புரிந்து செயற்பட முடியாது.
எமக்குள்ளே பல்வேறு கலாசார மற்றும் சமூக செயற்பாடுகள் அடங்கியுள்ளன. அதனை உள்ளூர் நபர்களை தவிர வெளிநாட்டவர்;களால் சரியான முறையில் பின்பற்ற முடியாது" எனக் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு ஈராக்கிற்குள் பிளவுப்பட்டிருந்த பல்வேறு சமூகத்தினரை ஒன்று சேர்ப்பதில் அவர் வெற்றிக் கொண்டிருந்தார்.
எப்போதும் தனது நாட்டு மக்களின் நலனில் குறியாக இருந்த தலைவர் அவர். அவர் கட்டாயமாக தண்டிக்கப்பட்டிருக்க கூடாது.
மாறாக ஈராக்கிற்கே திருப்பி அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என ஜோன் நிக்ஸன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சதாம் ஹுசைனின் 2003 ஆம் ஆண்டு ஆட்சி காலப்பகுதியில் ஈராக்கில் அணுவாயுத நடவடிக்கைகள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டு அமெரிக்காவினால் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
ஈராக்கில் சதாதமின் ஆட்சி 2003 ஆம் ஆண்டு அங்கு அணுவாயுத நடவடிக்கைகள் இடம்பெறுவதாக குற்றம்சாட்டப்பட்டு அமெரிக்காவால் கவிழ்க்கப்பட்டது.
பின்னர் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு சதாம் ஹுசைன் கைது செய்யப்பட்டு 2006 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM