மின்கட்டண அதிகரிப்பை எதிர்த்து தீப்பந்த போராட்டம் - ஓமல்பே சோபித தேரர் அழைப்பு

Published By: Digital Desk 5

07 Jan, 2023 | 03:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை (8)மாலை 6.30 மணிமுதல் 07 மணியவரையான காலப்பகுதியில் மின்விளக்குகளை அணைத்து, தீப்பந்தம் ஏந்தி அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு மக்கள் பேரவையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். விவசாயத்துறையில் தன்னிறைவு அடைந்த நாடு இன்று உணவு பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.

விவசாயத்துறை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் முழு விவசாயத்துறையையும் இல்லாதொழித்துள்ளது.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மூன்று வேளை உணவு வேளையை இரு வேளை உணவாக மட்டுப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.

பெற்றோர் தமது பிள்ளைகளின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அமுல்படுத்திய மின்கட்டண அதிகரிப்பை தாங்கிக் கொள்ள முடியாத உள்ள போது மீண்டும் மின்கட்டணத்தை 75 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.மின்கட்டணத்தை மீண்டும் அதிகரித்தால் மூச்சு விட கூட முடியாத நிலை ஏற்படும்.

மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களை ஒன்றுத்திரட்டி போராட்டத்தில் ஈடுப்படும் நிலை தற்போது கிடையாது,ஏனெனில் மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு பெரும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ள நிலையில் மக்களை ஒன்றுத்திரட்டி போராட்டத்தில் ஈடுபட முடியாது.

மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் உணர்வற்ற வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.மின்கட்டண எதிர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (8) மாலை 06.30.மணி முதல் 07.மணிவரையான காலப்பகுதியில் மின்விளக்குகளை அணைத்து, தீப்பந்தம் ஏந்தி அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமாறு நாட்டு மக்களிடம் வலியுறுத்துகிறேன்.

மின்கட்டண அதிகரிப்புக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் அரசாங்கம் தன்னிச்சையான முறையில் மின்கட்டணத்தை அதிகரிக்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58