வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டை குழந்தைகள் - அமெரிக்காவில் சம்பவம்

Published By: T. Saranya

07 Jan, 2023 | 02:50 PM
image

அமெரிக்காவில் ஒரு பெண், தனது இரட்டை குழந்தைகளை வெவ்வேறு ஆண்டுகளில் பெற்றுள்ளார். 

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் பெண் ஒருவர்  புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். 

ஆனால் அவை தனித்தனி ஆண்டுகளில் பிறந்தன என்று தி நியூயோர்க் போஸ்ட் தெரிவித்துள்ளது. 

காளி ஜோ ஸ்காட் தனது முதல் பெண் குழந்தையான அன்னி ஜோவை 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி நள்ளிரவு 11:55 மணிக்கு பெற்றெடுத்தார். பின்னர் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி நள்ளிரவு 12:01 மணிக்கு தனது இரண்டாவது பெண் குழந்தையான எபி ரோஸைப் பெற்றெடுத்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிறக்கும் போது இரு குழந்தைகளுக்கும் இடையேயான நேர வேறுபாடு 6 நிமிடங்கள் இருந்தாலும், முதல் குழந்தை துல்லியமாக 2022 ம் ஆண்டிலும், இரண்டாவது குழந்தை 2023ம் ஆண்டிலும் பிறந்துள்ளன. 

நள்ளிரவிலேயே குழந்தைகள் பிறக்கும் என்று தம்பதியினர் எதிர்பார்த்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. தங்களுக்கு வெவ்வேறு வருடத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதை மகிழ்ச்சியோடு தம்பதியினர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்