காணாமல் போன மாணவியை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவி கோரும் பொலிஸார்

Published By: Digital Desk 3

07 Jan, 2023 | 11:14 AM
image

(எம்.மனோசித்ரா)

கண்டி - தெல்தெனிய பொலிஸ் பிரிவில் அம்பகோட்டை, கென்கல்ல பிரதேசத்தில் 15 வயதுடைய மாணவியொருவர் பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பாமல் காணாமல் போயுள்ளதாக , அவரின் உறவினர்களால் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டமைக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி குறித்த மாணவி தனது பாடசாலை நண்பியொருவருடன் அன்றையதினம் பாடசாலைக்கு செல்லாமல் புகையிரதத்தின் ஊடாக கண்டியிலிருந்து கொழும்பிற்குச் சென்றுள்ளார். இதன்போது அதே புகையிரதத்தில் பயணித்த இளைஞன் ஒருவருக்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் அவர்கள் தொடர்பான தகவல்களை கேட்டறிந்து கொண்டுள்ளார்.

பின்னர் குறித்த இளைஞன் இரு மாணவிகளினதும் பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு, அவர்களை அழைத்துச் செல்லுமாறு குறிப்பிட்டுள்ளார். தாம் வரும் வரை அவர்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு பெற்றோர் இளைஞனிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இவ்வாறு கொழும்பு - காலி முகத்திடலில் பெற்றோருக்காக காத்திருந்த சந்தர்ப்பத்திலேயே மாணவி அங்கிருந்து காணாமல் போயுள்ளார்.

எனினும் மற்றைய மாணவி அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். காணாமல் போன 15 வயது மாணவி தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தகவலும் கிடைக்கப் பெறவில்லை. இவரை கண்டு பிடிப்பதற்காக பொலிஸார் பொது மக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

குறித்த மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தெல்தெனிய பொலிஸ் நிலையத்தின் 081-2374073 என்ற இலக்கத்திற்கும் , தெல்தெனிய பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் அத்தியட்சகரின் 071-8591066 என்ற இலக்கத்திற்கும் அழைத்து தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31