இன்சுலின் சரியாக சுரக்கவில்லை என்றாலும், இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இல்லை என்றாலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும். இதைத்தான் சர்க்கரை நோய் என்கிறோம். சர்க்கரை உருவாக இது வரை ஒன்பதிற்கும் மேற்பட்ட காரணங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள்.அதில் ஒன்று தான் கூஷிங் சிண்ட்ரோம் என்ற பாதிப்பின் காரணமாகவும் சர்க்கரை நோய் வரலாம்.

பொதுவாக சர்க்கரை நோய், டைப் 1 சர்க்கரை நோய், டைப் 2 சர்க்கரை நோய், கர்ப்பகால சர்க்கரை நோய் (Gestational Diabetes), இரண்டாம் நிலை சர்க்கரை நோய் (Secondary diabetes), மோடி சர்க்கரை நோய் (Maturity onset diabetes of the young =MODY),  குழந்தைப் பருவ சர்க்கரை நோய் என பலவகைப்படும்.

இதில் இரண்டாம் நிலை சர்க்கரை நோய் (Secondary Diabates) என்பது, உடலில் ஏற்படும் நோய்கள், பாதிப்பு காரணமாக, இன்சுலின் சுரப்பதில் பிரச்சினை ஏற்படும். இதனை துல்லியமாக கண்டறிந்து, சிகிச்சைகளைக் கொடுத்தாலே இந்தப் பிரச்னை ஓரளவு சரியாகிவிடும். 

அதே சமயத்தில், ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்பவர்களில், வெகு சிலருக்கு, ஸ்டீராய்டு அதிகமாக உடலில் சேர்வதால், சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இவர்கள் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்வதைத் தவிர்த்தாலே, சர்க்கரை நோய் குணமாகும். அதே போல் அட்ரினல் சுரப்பியில் இருந்து ஸ்டீராய்டு ஹார்மோன் சுரக்கிறது. இந்த ஹார்மோன் அதிகமாகச் சுரந்தால், ‘குஷிங் சிண்ட்ரோம்’ என்ற பிரச்னை ஏற்பட்டு, சர்க்கரை நோய் வரக்கூடும். அட்ரினல் சுரப்பியில் ஏற்படும் கட்டி காரணமாக, அட்ரினலின் ஹார்மோன் அதிகமாகச் சுரந்தால், சர்க்கரை நோய் வரலாம். .

டொக்டர் N.K.நாராயணன்

தொகுப்பு அனுஷா

தகவல் : சென்னை அலுவலகம்