வடக்கில் முன்­னெ­டுக்­கப்­ப­டவுள்ள பொருத்து வீட்­டுத்­திட்­டத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து கிளி­நொச்சி மாவட்ட பொது அமைப்­புக்­களால் கிளி­நொச்சி மாவட்ட செயலகம் முன்­பாக இன்று  காலை 9.00 மணியளவில் கவ­ன­யீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. 

2009ஆம் ஆண்­டுக்கு  பின்னர் கிளி­நொச்சி மாவட்­டத்தில் மீள்­கு­டி­யே­றிய சுமார் 20 ஆ­யிரம் வரை­யான குடும்­பங்கள் நிரந்­தர வீடுகள் இன்றி கடந்த 7 ஆண்­டு­க­ளாக தற்­கா­லிக வீடு­களில் வாழ்ந்து வரு­கின்­றன.

அவ்­வா­றான நிலையில் குறித்த பொருத்து வீட்­டுத்­திட்டம் தொடர்பில் அவர்கள் தெரி­விக்­கையில், 

மீள்­கு­டி­யேற்ற அமைச்­சினால் தற்­போது 65000 பொருத்து வீடுகள் வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான பொருத்து வீடுகள் எமது சூழ­லுக்கு பொருந்­தாது. 

எமது வாழ்க்­கை­முறை, எமது பிர­தே­சத்தின் கால­நிலை, எமது பாரம்­ப­ரிய கட்­ட­ட­முறை என்­பன இதன் மூலம் சிதைக்­கப்­ப­டு­கின்­றது. மறை­மு­க­மாக பல கட்­டட வேலை செய்யும் தொழி­லா­ளர்­க­ளது வேலை பறிக்­கப்­ப­டு­கின்­றது. 

பனையால் வீழ்ந்­த­வனை மாடு ஏறி மிதிப்­பது போல கடந்த 30 வருட யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட எமக்கு 5 வருட ஆயுட்­காலம் கொண்ட இவ்­வா­றான வீடு­களை வழங்க முற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக காணப்படுகின்றது. எனவே முன்னர் வழங்கப்பட்டது போன்ற நிரந்தர வீட்டுத்திட்டங்களை வழங்வேண்டும் என கோரியுள்ளனர்.