சென்னையில் இன்று வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற ஒன்பதாவது உலக தமிழ் வம்சாவளி மாநாட்டில் ஊடகத்துறையில் சாதனை புரிந்ததற்காக வீரகேசரி நாளிதழின் முகாமைத்துவப் பணிப்பாளரான குமார் நடேசனுக்கு ‘சாதனை தமிழன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு இந்த விருதினை தமிழ்நாடு சிறு, குறு தொழில் துறை மற்றும் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய துறையின் அமைச்சரான மாண்புமிகு தா. மோ. அன்பரசன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சரான மாண்புமிகு கே எஸ் மஸ்தான் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
சென்னை வர்த்தக மையத்தில் உலகத் தமிழ் வர்த்தக சபை சார்பாக ஒன்பதாம் ஆண்டு உலக தமிழ் வம்சாவளி மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டினை உலக தமிழ் வர்த்தக சபையின் தலைவரான திரு செல்வகுமார் ஒருங்கிணைந்திருந்தார்.
இந்த மாநாட்டில் தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் அனுசரணையுடன் இலங்கை, இந்தியா, மலேசியா, கனடா உள்ளிட்ட அறுபதிற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 1500க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர்கள், முந்நூறுக்கும் மேற்பட்ட வர்த்தக சங்கங்கள் மற்றும் பன்னாட்டு வர்த்தக ஆணையங்கள் சார்பில் அதன் பிரதிநிதிகள் பங்குபற்றினர்.
இவ்விழாவில் இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி. விக்னேஷ்வரன், இலங்கையின் முன்னாள் மாகாண கல்வித்துறை அமைச்சர் திரு. ராதாகிருஷ்ணன், மலேசிய நாட்டின் அமைச்சர் சிரஸ்வதி கந்தசாமி, வி ஐ டி பல்கலைகழகத்தின் வேந்தர் திரு விஸ்வநாதன் உள்ளிட்ட சர்வதேச அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் சிறப்பு அதிதிகளாக பங்குபற்றினர்.
ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய திகதியில் நடைபெற்ற இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ‘சாதனை தமிழன்’ விருது மற்றும் ‘நல் ஆசான்’ விருது வழங்கும் விழழ நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஊடகத்துறையில் ஜனநாயகத்தைப் போற்றி பாதுகாக்கும் பாரம்பரிய ஊடகமான வீரகேசரியின் சேவையைப் பாராட்டி, அதன் முகாமைத்துவப் பணிப்பாளரான குமார் நடேசன் சாதனை தமிழன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவரைத் தொடர்ந்து சிறைச்சாலையில் வாடும் இளம்பிராயத்து குற்றவாளிகளைக் கண்டெடுத்து, அவர்களுக்கு கல்வியறிவு ஊட்டும் பணியில் தம்மை அர்ப்பணித்திருக்கும் கருஞ்சட்டை ராஜேந்திரன் அவர்களுக்கு ‘நல் ஆசான்’ விருதும் வழங்கப்பட்டது.
இந்த மாநாட்டில் சென்னையிலுள்ள கொரியா நாட்டின் உயர் துணை ஸ்தானீகர் உள்ளிட்ட பல இராஜங்க ரீதியாக பணியாற்றும் உயரதிகாரிகளும் பங்குபற்றி சிறப்பித்தனர்.
இந்த விழாவில் விருது வழங்கும் நிகழ்வுடன், இளங்கலைஞர்களின் கலாச்சார நாட்டிய நிகழ்வுகளும் நடைபெற்றன.
மாநாட்டின் வளாகத்தில் இருபதிற்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசாங்க துறையின் அரங்குகள் இடம்பெற்றிருத்தது- இதில் பணியாற்றும் பிரதிநிதிகள், உலகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வருகைத்தந்த தமிழர்களுக்கு, முதலீடு குறித்த விளக்கங்களையும், தமிழக அரசு மற்றும் இந்திய அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் விரிவாக விளக்கினர்.
9ஆம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி ஒன்று கூடலின் முழுமையான காணொளிக்கு
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM