விஜய் சேதுபதி நடிக்கும் 'ஃபார்ஸி' வலைத்தள தொடர் பெப்ரவரி 10இல் வெளியீடு

Published By: Nanthini

06 Jan, 2023 | 05:11 PM
image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, பொலிவுட் நடிகர் ஷாகித் கபூர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'ஃபார்ஸி' எனும் வலைத்தள தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதியன்று அமேசான் ப்ரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'தி ஃபேமிலி மேன்' எனும் வலைத்தள தொடரை இயக்கி டிஜிட்டல் தள உலகில் புகழ்பெற்ற முன்னணி இரட்டை இயக்குநர்களான ராஜ் மற்றும் டி.கே ஆகியோரின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'ஃபார்ஸி' தொடரில் விஜய் சேதுபதி, ஷாகித் கபூர், கே.கே.மேனன், ராசி கண்ணா, ரெஜினா கஸண்ட்ரா, புவன் அரோரா, அமோல் பலேகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சஸ்பென்ஸ், க்ரைம், த்ரில்லர் ஜேனரில் உருவாகியிருக்கும் 8 அத்தியாயங்கள் கொண்ட இந்த தொடரை அமேசான் ப்ரைம் டிஜிட்டல் தளத்துக்காக டி 2 ஆர் ஃபிலிம்ஸ் என்னும் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கே தயாரித்திருக்கிறார்கள். 

இந்த வலைத்தள தொடருக்கான கதையை இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி.கேயுடன் இணைந்து ஆர்.சீதா, சுமன் குமார் மேனன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். 

பணக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்புக்கு பாடம் கற்பிக்க நினைக்கும் சமூகத்தின் பின்தங்கிய நிலையில் உள்ள புத்திசாலி தெருக்கலைஞன் ஒருவரை சுற்றி நடக்கும் கதையாக இது தயாராகியுள்ளது. 

இதனிடையே 'ஃபார்ஸி' தொடர் ஹிந்தி மொழியில் நேரடியாக தயாராகியிருந்தாலும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது என்பதும், விஜய் சேதுபதி ஹிந்தி பேசி நடித்திருக்கும் வலைத்தள தொடர் என்பதால் தொடருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சந்தோஷ் நாராயணன் இசையில் “ஜிகர்தாண்டா double...

2023-09-28 15:07:09
news-image

சித்தா - விமர்சனம்

2023-09-28 15:02:48
news-image

நடிகர் மதுர் மிட்டல் நடிக்கும் '800'...

2023-09-28 14:30:39
news-image

தளபதி விஜயின் 'லியோ' படத்திலிருந்து அடுத்த...

2023-09-28 12:33:16
news-image

நடிகர் ஆதி நடிக்கும் 'சப்தம்' படத்தின்...

2023-09-27 14:40:50
news-image

தன் பாலின சேர்க்கையாளர்களின் காதலை உரக்கப்...

2023-09-27 14:41:11
news-image

தளபதி விஜயின் 'லியோ' பட இசை...

2023-09-27 14:43:36
news-image

சிறிய முதலீட்டில் தயாராகி இருக்கும் 'எனக்கு...

2023-09-26 17:25:37
news-image

மணிரத்னம், கமல்ஹாசன் பாராட்டிய சித்தார்த்தின் 'சித்தா'

2023-09-26 15:57:08
news-image

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும்...

2023-09-26 17:23:44
news-image

இரட்டைச் சாதனை படைத்திருக்கும் ஒரே இந்திய...

2023-09-26 14:51:25
news-image

வித்தியாசமாக உருவாகி இருக்கும் 'இறைவன்'

2023-09-25 13:12:03