தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி மல்லாவியிலும் 2ஆம் நாள் போராட்டம் 

Published By: Nanthini

06 Jan, 2023 | 04:14 PM
image

டக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி இரண்டாவது நாளாக மல்லாவியிலும் பேருந்து நிலையத்துக்கு முன்பாக இன்று (ஜன. 6) காலை 11 மணியளவில் போராட்டம் இடம்பெற்றது.

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரளச்செய்ய ஒன்றிணைவோம் என கூறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் "வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீள ஒன்றாக்கப்பட்டு, வடக்கு, கிழக்கு தனி ஒரு மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும்", "அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும்", "இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மத்திய அரசால் மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும்" போன்ற பதாதைகளை தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டமானது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் நேற்று ஆரம்பமாகி தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்த வகையில் இந்த போராட்டம் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-11-05 06:20:03
news-image

எம்பிலிப்பிட்டியவில் ஆயுதங்கள் வைத்திருந்த சந்தேக நபர்...

2024-11-05 03:00:16
news-image

இரட்டை வேடமிட்டு மக்களை ஏமாற்றும் ஜனாதிபதி...

2024-11-04 23:39:48
news-image

அநுர அரசாங்கத்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை....

2024-11-04 23:36:36
news-image

மட்டக்களப்பில் வாக்குகளை மிரட்டி பெற முயற்சிக்கும்...

2024-11-04 20:17:28
news-image

குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட...

2024-11-04 20:04:49
news-image

பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி மூதாட்டி...

2024-11-04 18:59:16
news-image

பாராளுமன்றத்துக்குள் குண்டு வீசியவர்கள் பாராளுமன்றத்தை விரமசிப்பதற்கு...

2024-11-04 16:36:23
news-image

தமிழ் மக்கள் பலமான கூட்டணியொன்றை பாராளுமன்றத்திற்கு...

2024-11-04 19:00:11
news-image

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 1,535...

2024-11-04 18:30:17
news-image

முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடுவதற்கு தேசிய...

2024-11-04 18:21:51
news-image

பாணந்துறை - ஹொரனை பிரதான வீதியில்...

2024-11-04 18:07:53