இந்த வருடம் மக்கள் மத்தியில் அதிக பிபல்யமாக அதிகம் பகிரப்பட்ட தேவையில்லாத விடயங்கள் பற்றி இங்கு காணலாம்.
பொகோமன்- கோ வீட்டுக்குள்ளேயே ஸ்மார்ட் போன் செயலிகளில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களை தெருத் தெருவாக அலையவிட்ட விளையாட்டு. எந்த வீட்டில் அம்மா காய்கறி வாங்கி வர கூறினால் கூட நகராத ஆட்கள், இதுவரை சென்றுவராத ஏரியாக்களுக்கு கூட பொகோமன் பிடிக்க சென்றனர். சிலர் வங்கிகளுக்குள் எல்லாம் பொகோமன் பிடிக்க சென்று காவலர்களால் விரட்டப்பட்ட சம்பவங்களும் நடந்தன.
ஒரு விரல் சேலஞ் கண்ணாடி முன் நிர்வாணமாக நின்றுக் கொள்ள வேண்டும். ஒரு விரல் கொண்டு தங்கள் மேல் உடல் மற்றும் கீழ் உடல் மறைத்தப்படி செலஃபீ எடுத்து அதை பகிரவேண்டும். இதற்கு பெயர் 1-Finger Challenge."
யூடியூப் விமர்சகர்கள்! ஒரு படத்தை பார்த்து அதை பற்றிய கருத்து சொல்வது என்பது வேறு. அதை பற்றி ஆழமாக விமர்சனம் செய்வது வேறு. அது என்ன படம், என்ன பிரிவில் எடுக்கப்பட்டுள்ளது என எதுவும் தெரியாமல் எல்லாவற்றையும் குப்பைப் படம் என கூறும் கூட்டமாகவும்., ஒரு படத்திற்கு ஐந்திற்கு மூன்று மதிப்பெண்ணுக்கும் கீழ் அளிப்பதால் தான் ஒரு சிறந்த விஞ்ஞானி என்ற எண்ணம் கொண்டவர்கள் பெருமளவு யூடியூப் விமர்சகர்கள் ஆன வருடம் 2016! டுவிட்டர் டிரென்ட்ஸ் முன்பெல்லாம் டுவிட்டரில் பெரும்பாலானோரால் அதிகம் பேசப்படும் விஷயம் டிரென்ட் ஆனது. ஆனால், இந்த வருடம் ஒரு விஷயத்தை டிரென்ட் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஹேஷ்டாக் பயன்படுத்தினர்.
பிரபலங்களை கலாய்ப்பது! முன்பெல்லாம் ஒரு பிரபலத்தை பார்ப்பதே கடினம். அவருடன் பேசுவதெல்லாம் அரிதிலும் அரிது. ஆனால், டுவிட்டர், ஃபேஸ்புக் வந்த பிறகு இது மிக எளிமையாகிவிட்டது. இது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பிடிக்காதவர்களுக்கும் கூட கைக்கு எட்டும் கனியாகிவிட்ட நிலைமை ஏற்பட்டதால் பல பிரபலங்கள் வேண்டுமென்றே கலாய்க்கப்பட்டனர். சில பிரபலங்கள் சொந்த டுவீட்டிலே சூனியம் வைத்துக் கொண்டனர்.
ஏதேனும் ஒரு ஏழை குழந்தை, அரசு பாடசாலை மாணவர் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு. அதனுடன் ஒரு பொய் செய்தியை இணைந்து, "இதற்கெல்லாம் நீங்க லைக் போடுவீங்களா? நடிகை படம்-னா லைக் போடுவீங்க.." போன்ற பதிவுகள் ஆயிரக்கணக்கான ஷேர்கள் கடந்து ஹிட் ஆகின. ஆனால், அவற்றில் 99.99% பொய் பதிவுகள் தான். தங்கள் ஃபேஸ்புக் பக்கத்திற்கு லைக் கிடைக்க இதை செய்துள்னர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM