வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் வவுனியா, தரணிக்குளத்தில் 2ஆம் நாளான இன்றும் (ஜன. 6) முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த போராட்டமானது வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தரணிக்குளம் கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்துக்கு முன்பாக இன்று காலை 11 மணியிலிருந்து இடம்பெறுகிறது.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெற முடியாத சமஷ்டியை வலியுறுத்த, அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் இணையுமாறு வேண்டுகோள் விடுத்தே போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதன்போது தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் ஒருமித்த முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும், அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியில் திரள்க, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு, கிழக்கு தனி மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை மக்கள் ஏந்தியுள்ளனர்.
அத்துடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரும் ஊடகங்களுக்கு வாசித்துக் காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM