சீனா கொவிட் - பிரபலங்கள் மரணம் - உயிரிழப்புகள் குறித்து உண்மை மறைக்கப்படுவதாக சீற்றம்

Published By: Rajeeban

06 Jan, 2023 | 01:10 PM
image

சீனாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நபர்கள் சிலரின் உயிரிழப்பை தொடர்ந்து கொவிட்டினால் உயிரிழந்தவர்களி;ன் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதை விட அதிகமாகயிருக்கலாம் என கரிசனை வெளியாகியுள்ளது.

புதுவருடதினத்தன்று சீனாவின் பிரபல நடிகர் கொங்ஜிங்டாங் உயிரிழந்துள்ளார்.அவரின் மரணத்திற்கு சமூக ஊடகங்களில் மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

சீன மக்கள் மத்தியில் பிரபலமானவராக காணப்பட்ட அவரின் மரணத்திற்கான காரணம் வெளியாகவில்லை.

நான் மனமுடைந்து போயிருக்கின்றேன்  அவர் இரண்டுதலைமுறைக்கு மேல் எங்கள் நினைவுகளில் இருந்தார் என சீனாவின் வெய்போவில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

2008 ஒலிம்பிக்கில் ஆற்றுகையில் ஈடுபட்ட கலைஞர் சு லன்லானின் (40) மரணம் கடந்த மாதம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

அவர் நோய்காரணமாக உயிரிழந்தார் என அறிவிப்பு வெளியாகியிருந்தது.எனினும் அவரது மரணத்திற்கான காரணங்களை அவரது குடும்பத்தினர் வெளியிடவில்லை.

கடந்த மாதம் சீனா தனது பூஜ்ஜிய கொவிட் கொள்கையை  முடிவிற்கு கொண்டுவந்துள்ளதை தொடர்ந்து பெருந்தொற்று  மீண்டும் அதிகரித்துள்ளது- மருத்துவமனைகளும் தகனசாலைகளும் நிரம்பி வழிகின்றன.

இதேவேளை பிரபலங்களின் மரணங்கள் காரணமாக பலர் கொவிட் குறித்து சீனா வெளியிடும் புள்ளிவிபரங்கள் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சீனாவின் சமூக ஊடகமான வெய்போவில் பல பயனாளர்கள் உண்மையான உயிரிழப்புகள் மறைக்கப்படுவது குறித்து கடும் சீற்றம் வெளியிட்டுள்ளனர்- இது தொடர்பான ஹாஸ்டாக் ஒன்றை 220 மி;ல்லியன் பயனாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.

கல்விமான்களோ பிரபலங்களோ அல்லது எனது உறவினர்களோ நண்பர்களோ பலர் உயிரிழந்துள்ளனர் என நான் உணர்கின்றேன் ஆனால் நிபுணர்கள் அவ்வாறு பலர் உயிரிழக்கவில்லை என தெரிவித்து வருகின்றனர் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26