38 இலங்கை அகதிகள் தம்மை மீள இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மங்களூரில் உண்ணாவிரதம்

Published By: Nanthini

06 Jan, 2023 | 01:03 PM
image

லங்கை அகதிகள் 38 பேர் தம்மை மீள இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மங்களூரில் இன்று (ஜன. 6) காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கை அகதிகள் 38 பேர், தம்மை மீள இலங்கைக்கு அனுப்புமாறு கோரி மங்களூரில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கர்நாடகாவின் மங்களூரில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அகதிகளை விடுதலை செய்த நீதிமன்றம், அவர்களை நாட்டுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது.

அவ்வாறு அகதிகளை இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாட்டினை செய்வதற்காக 15 நாட்கள் அவகாசம் நீதிமன்றினால் வழங்கப்பட்ட போதிலும், தம்மை அனுப்புவதற்கான ஏற்பாட்டினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தே அகதிகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் யாரிடம் தொடர்புகொண்டு பேசுவது என்பது தெரியாமல்  பரிதவிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது ஒரு விடுதியில் தாம் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், உணவு, மருத்துவ வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும், சிலர் கடும் நோய்த்தாக்கத்துக்கு உட்பட்டுள்ளதாகவும் அந்த அகதிகள் தெரிவித்துள்ளனர்.

மங்களூரில் உள்ள அகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த 26 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒருவருமாக 38 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தம்மை விடுவிக்க சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இதன்போது அகதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார் வைபவம்

2025-03-15 09:26:52
news-image

பட்டலந்த அறிக்கை குறித்து அரசாங்கம் நடவடிக்கை...

2025-03-14 17:24:29
news-image

இன்றைய வானிலை 

2025-03-15 06:23:42
news-image

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை : நாளை...

2025-03-15 03:05:55
news-image

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தோட்ட...

2025-03-15 02:56:50
news-image

பொருளாதாரத்தில் பெண்களின் முழுமையாகப் பங்கேற்பை கட்டுப்படுத்தும்...

2025-03-15 02:46:42
news-image

பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் மட்டுமன்றி...

2025-03-15 02:41:59
news-image

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; ஒருவர்...

2025-03-15 02:34:53
news-image

எவ்வகையில் கணக்கெடுப்பினை முன்னெடுத்தாலும் சரியான தரவுகளைப்...

2025-03-15 01:58:07
news-image

தோட்டப்புற வீடுகளுக்கு மின்இணைப்பை பெறுவதற்கான முறைமையை...

2025-03-14 16:32:13
news-image

மின்சாரக்கட்டணத்தை மூன்று வருடங்களில் 30 சதவீதம்...

2025-03-14 14:48:16
news-image

வரவு, செலவுத்திட்டப் பற்றாக்குறைக்காக நாணய நிதியத்தின்...

2025-03-14 16:40:45