பஸ்ஸுக்குள் கடற்படை தாதி ஒருவரின் உடலில் சாய்ந்து துன்புறுத்தினார் என்ற சந்தேகத்தில் வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட கமரா பொருத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி மூலம் வைத்தியர் தாதியை வீடியோ எடுத்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதேசத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேக நபர் மேல் மாகாணத்தில் உள்ள போதனா வைத்தியசாலை ஒன்றில் பணிபுரிபவராவார்
கடற்படையில் பணிபுரியும் தாதி இது குறித்து பயணிகளுக்கு தெரிவித்ததையடுத்து, பயணிகள் குழுவொன்று வைத்தியரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளது.
சந்தேக நபர் மதுபோதையில் இருந்தமை தெரிய வந்ததையடுத்து, கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்தியர் முன்னிலையில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர் மதுபோதையில் இருந்தமை மருத்துவ அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடற்படை தாதியும் இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM