ஹங்வெல்ல ஹோட்டல் உரிமையாளர் பர்ஹான் கொலைச் சந்தேக நபர் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் பலி!

Published By: Digital Desk 3

06 Jan, 2023 | 10:30 AM
image

ஹங்வெல்ல நகரின் உணவக உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அவரைக் கொலை செய்த  சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஹங்வெல்ல நிரிபொல பிரதேசத்தில் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

கடந்த மாதம் 18 ஆம் திகதி இரவு சிகரெட் வாங்க மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் கடைக்குள் புகுந்து உணவக உரிமையாளர் முகமது பர்ஹான் (46) என்பவரை துப்பாக்கியால் சுட்டு கொன்றார்.

கொல்லப்பட்ட நபர் ஹங்வெல்ல பொலிஸ் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினராவார். 

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட மேற்கு-தெற்கு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள், கொலை சம்பவத்துக்கு உதவிய மேலும் இருவரை கைது செய்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதவாச்சியில் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

2025-03-20 10:04:06
news-image

கொழும்பில் 19 கிலோ நிறையுடைய போதைப்பொருட்களுடன்...

2025-03-20 10:04:27
news-image

பனிப்போர் காலத்தில் இலங்கையில் சிஐஏயின் இரகசிய...

2025-03-20 10:16:57
news-image

400 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன்...

2025-03-20 09:30:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மிதமான நிலையில் காற்றின்...

2025-03-20 09:37:05
news-image

மன்னார் விளாங்குளி கிராம வயலில் உயிரிழந்த...

2025-03-20 09:48:33
news-image

தேசபந்து தென்னக்கோனின் பிணை மனு மீதான...

2025-03-20 09:09:57
news-image

ரயில் மோதி வாகனம் விபத்து ; ...

2025-03-20 09:14:32
news-image

வியாழேந்திரன் - பிள்ளையான் கூட்டு ;...

2025-03-20 08:58:08
news-image

உள்ளூராட்சி சபைகளில் தனித்து ஆட்சி அமைக்க...

2025-03-20 08:40:17
news-image

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு...

2025-03-20 08:56:30
news-image

இன்றைய வானிலை

2025-03-20 06:14:11