பொருளாதார நெருக்கடி – எந்த பிள்ளையை பாடசாலைக்கு அனுப்புவது என தீர்மானிக்கவேண்டிய நிலையில் பெற்றோர்.

Published By: Rajeeban

06 Jan, 2023 | 09:00 AM
image

bbc

பத்து வயது மல்கி அதிகாலையிலேயே பரபரப்பாக காணப்படுகின்றாள், தனது சகோதரங்கள்  உறக்கத்திலிருந்து எழுவதற்கு முன்னர் உறக்கத்திலிருந்த எழுந்த அவள் தனது நகங்களை அழகுபடுத்துகின்றாள்.

இன்று அவள் மீண்டும் பாடசாலை செல்லும் முதல்நாள் - மிகவும் அழகாக பாடசாலை செல்லும் ஆர்வத்துடன் அவள் காணப்படுகின்றாள்.

ஆனால் அவளது சகோதரர்கள் பாடசாலை செல்ல முடியாது – வீட்டிலேயே இருக்கவேண்டும்,அவளை மாத்திரம் பாடசாலைக்கு அனுப்பகூடிய நிலையில் பெற்றோர்கள் உள்ளனர்.

ஆறு மாதத்திற்கு முன்னர் சுதந்திரத்திற்கு பின்னர் சந்தித்த மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை குறித்து உலகின் கவனம் திரும்பியது.

இலங்கையில் மீண்டும் அமைதி பெருமளவிற்கு திரும்பியுள்ள போதிலும்,பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைகள் பல மடங்கு அதிகரித்தமை போன்றவற்றின் தாக்கத்தை பொதுமக்கள் மத்தியில் பார்க்க முடிகின்றது.

ஓவ்வொரு பெற்றோரினதும் பயங்கரமான கனவு

மல்கியின் தாய் தனது பிள்ளைகள் பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக அவர்களை பாடசாலைக்கு செல்லவிடாமல் நிறுத்திவைத்துள்ளார். பட்டாசு விற்பனையின் மூலம் அவர்கள் பணம் உழைக்க முடியும்.

பணவீக்கம் இலங்கையின் வரலாற்றில் மிக அதிகளவாக 95 வீதமாக அதிகரித்தபோது உணவுப்பொருட்களின் விலைகளும் அதிகரித்தன.

சில நாட்கள் மல்கியின் குடும்பத்தில் எவரும் உணவு உண்பதில்லை.

இலங்கையில் பாடசாலை கல்வி இலவசம் என்கின்ற போதிலும் உணவு வழங்கப்படுவதில்லை.

சீருடைகள் போக்குவரத்து செலவுகள் போன்றவற்றையும் சேர்த்தால் கல்வி என்பது பிரியங்காவால் சமாளிக்க முடியாhத ஆடம்பரமான விடயமாக மாறிவிடுகின்றது.

தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பவேண்டும் என்றால் ஒரு பிள்ளைக்கு 400 ரூபாய் தேவை என்கின்றார் அவர்.

ஒரு அறை வீட்டில் - ஒரு கட்டிலில் ( அனைவரும் பயன்படுத்துவது அதைத்தான்) அமர்ந்திருந்தவாறு அவர் தனது கண்ணீரை துடைத்துக்கொள்கின்றார்.

என்னுடைய பிள்ளைகள் அனைவரும் நாளாந்தம் பாடசாலைக்கு செல்பவர்கள்  தற்போது இவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கான வசதி என்னிடமில்லை என்கின்றார் அவர்.

மல்கியின் சீருடையும் சப்பாத்தும் அளவாக உள்ளதால் அவரால் பாடசாலை செல்ல முடியும்.

இன்று பாடசாலை செல்ல முடியவில்லை என்ற கவலையில் அவரது இளையசகோதரி துலாஞ்சலி அழுகின்றார்.

அழவேண்டாம் நாளை பாடசாலைக்கு அனுப்புகின்றேன் என்கின்றார் தாய்.

சிதைக்கப்பட்ட கல்வி

சூரியன் உதித்ததும் வெள்ளை சீருடையில் அழுக்குநிறைந்த வீதிகளில் மாணவர்கள் பாடசாலை செல்ல அவசரப்படுகின்றனர்.மோட்டார் சைக்கிள்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் அவர்கள் பயணிக்கின்றனர்.

பிரக்கிரம வீரசிங்க பெருமூச்சு விடுகின்றார்.

கொழும்பு கொட்டாஞ்சேனை பாடசாலையின் அதிபர் அவர் – பொருளாதார நெருக்கடியை அவர் நாளாந்தம் பார்க்கின்றார்.

பாடசாலை ஆரம்பமாகும்போது மாணவர்கள் பசியால் மயங்கிவிழுகின்றனர் என்கின்றார் அவர்.

அரசாங்கம் பாடசாலைகளிற்கு அரிசியை வழங்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்ற போதிலும் பிபிசி தொடர்புகொண்ட பல பாடசாலைகள் தங்களிற்கு அரிசி கிடைக்கவில்லை என தெரிவித்தன.

ஒரு கட்டத்தில் மாணவர்களின் பாடசாலை வருகை 40 வீதத்திற்கும் குறைவாக காணப்பட்டது, இதனால் மாணவர்களிற்கு வழங்குவதற்காக மேலதிக உணவை கொண்டுவருமாறு ஆசிரியர்களை கட்டாயப்படுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன் என்கின்றார் அதிபர் வீரசிங்க

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54