வெளிநாடுகளில் இருந்து இந்தியா சென்ற பயணிகளில் 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published By: Rajeeban

05 Jan, 2023 | 04:21 PM
image

கொரோனாவின் புதிய வகை திரிபு உலகெங்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கக்கூடிய நிலையில் கடந்த டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து இந்தியா   சென்ற124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் சமீப நாட்களாக புதிய கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 19இ227 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 124 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

இதில் 40 பேருக்கு 11 வகையான புதிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 14 பேருக்கு எக்ஸ்.பி.பி (ஒடிடி) வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59