- ஆர்.யசி

எவரதும் அவசரத் தேவைகளுக்காக புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முடியாது. ஆராயாது உடனடியாக அரசியல் அமைப்பு கொண்டு வரப்படுமாயின் அதை எதிர்ப்போம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அரசாங்கம் அவ்வாறு ஏதேனும் தீர்மானங்கள் எடுக்குமாயின் நாமும் அரசாங்கத்துக்கு எதிரான நகர்வுகளை மேற்கொள்ளவேண்டி வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாடு எவ்வாறானது என வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.