மத நல்லிணக்கத்தை சீர்குலைப்போருக்கு எதிராக 10 வருட சிறைத் தண்டனை வழங்க முடியும் - நீதியமைச்சர்

Published By: Digital Desk 2

05 Jan, 2023 | 03:47 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

மத நல்லிணக்கம் மற்றும் இன நல்லிணக்கம் நாட்டில் கட்டி எழுப்பப்பட்டுள்ள நிலையில் அதனை சீர்குலைக்க முயல்வோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் ஸ்ரீதலதா மாளிகையைஅவமதிக்கும் சகையில் கருத்து தெரிவித்த நபருக்கு தண்டனைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடு்ப்போம் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

பௌத்தர்களின் முக்கிய மத வழிபாட்டுத் தலமான ஸ்ரீ தலதா மாளிகையை அவமதிக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் மூலம் கருத்துக்களை வெளியிட்டு வரும் சேபால அமரசிங்க தொடர்பில் வியாழக்கிழைமை (ஜன.05) சபையில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர். உறுப்பினர்களின் கருத்துக்களை செவிமடுத்த பின்னர் அரசாங்கம் சார்பில் அதற்கு பதிலளிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஸ்ரீ தலதா மாளிகை இலங்கை மக்களின் கௌரவத்தை மட்டுமின்றி முழு உலகினதும் கௌரவத்தை பெற்றுள்ள முக்கிய தலமாகும். அந்த வகையில் அதன் கௌரவத்திற்கு பங்கம் ஏற்படும் வகையிலோ  அவமதிப்பு ஏற்படும் வகையிலோ கருத்துக்களை வெளியிடுவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது.

நாட்டில் தற்போது இன, மத பேதமின்றி மக்கள் மத்தியில் சிறந்த நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அனைத்து மதங்களுமே தனது மதங்களை மதித்து செயல்படுவதுடன் அனைத்து மதங்களும் அகிம்சை வழியையே போதிக்கின்றன.

அந்த வகையில் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் சமூக வலைத்தளங்கள் மூலம் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட எவரும் அதற்கு இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறு செயல்படும் நபருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அவ்வாறு பௌத்த மதம் மட்டுமின்றி எந்த மதத்திற்கு எதிராகவும் எந்த மத நம்பிக்கைக்கு எதிராகவும் செயற்படும் நபருக்கு எதிராக தண்டனைச் சட்டக் கோவை  கீழ் சட்டம் நிறைவேற்றப்படும்.

பௌத்த மதம் மட்டுமின்றி ஏனைய அனைத்து மதங்களினதும் நம்பிக்கையை சீர்குலைப்பதோ அல்லது மதங்கள் மீதான கௌரவத்தை சிதைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதோ  அது பாரிய குற்றமாகும். நாட்டில் நடைமுறையில் உள்ள தண்டனைச் சட்டக் கோவை சட்டத்தின் 290 ஆவது சரத்திற்கு அமைய அது பாரிய குற்றமாகும். அதற்கு தண்டனை வழங்கவேண்டும்.

அத்துடன் ஐ,சி.சி.பீ.ஆர். சட்டத்தின் பிரகாரம் இவ்வாறான குற்றத்துக்கு 10வருடம் வரை சிறைத்தண்டனை வழங்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்...

2023-12-10 13:27:16
news-image

"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி...

2023-12-10 13:09:33
news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க...

2023-12-10 12:55:20
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03
news-image

திரிபோஷா, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு...

2023-12-10 12:54:32
news-image

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு 

2023-12-10 12:20:07
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று...

2023-12-10 13:00:20
news-image

உலக ரீதியில் பலம் வாய்ந்த நாடுகளின்...

2023-12-10 12:14:23
news-image

கடன் செலுத்தும் காலத்தை நீடித்து வட்டியைக்...

2023-12-10 11:44:10
news-image

கொத்து கொத்தாக இலங்கையர்களின் உடலங்கள் இஸ்ரேலில்...

2023-12-10 11:16:12
news-image

நாடு முழுவதும் மின் துண்டிப்பு :...

2023-12-10 11:03:57
news-image

இலங்கைக்கு தேசிய விடுதலை இயக்கமே அவசியம்...

2023-12-10 11:08:10